வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

3 வருடம் முக்கியும் முடிந்தபாடில்லை.. இடியாப்ப சிக்கலில் சிக்கித்தவிக்கும் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் படத்தின் சின்ன சின்ன வேலைகளை முடிக்காமல் இருப்பதால் கோப்ரா படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஏங்கி  கொண்டிருக்கின்றனர். கோப்ரா படத்தின் பெரும்பகுதி ரஷ்யாவில் சூட்டிங் செய்யப்பட்டது. இது ஒரு சயின்ஸ் திரில்லர் மூவியாக எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்த படம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சூட்டிங் நடைபெறாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. அதுமட்டுமின்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் மற்றும் விக்ரம்  என  மூவர்க் இடையையும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த வண்ணமே இருந்தது.

அதுவும் இந்தப் படம் இவ்வளவு நாள் தள்ளிப்போவதற்கு  ஒரு பெரிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து கோப்ரா படம் மே 26 வெளியிட திட்டமிட்டு இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார். இதனால் கோப்ரா படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விக்ரமின் தனித்துவமான நடிப்பு இன்னும் ரசிகர்களை சுண்டி இழுத்து தான் வருகிறது. கமலின் தசாவதாரத்தை மிஞ்சுவாரா விக்ரம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Trending News