Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரெக்கார்ட் பிரேக் செய்த மஞ்சுமல் பாய்ஸ்.. 25 நாட்களில் 20 மடங்கு லாபம் பார்த்த தயாரிப்பாளர்

ரெக்கார்ட் பிரேக் செய்த மஞ்சுமல் பாய்ஸ்.. 25 நாட்களில் 20 மடங்கு லாபம் பார்த்த தயாரிப்பாளர்

Manjummel Boys : மலையாள சினிமாவில் இந்த வருடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். மலையாள மொழி படங்கள் தமிழ் ரசிகர்களை சமீபகாலமாக பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அல்போன்ஸ் புத்திரனின் […]

Manjummel Boys : மலையாள சினிமாவில் இந்த வருடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். மலையாள மொழி படங்கள் தமிழ் ரசிகர்களை சமீபகாலமாக பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் அல்போன்ஸ் புத்திரனின் பிரேமம் படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியாகி இருந்தது.

கமலின் நடிப்பில் வெளியான குணா படத்தின் சாயலில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்திற்குப் பிறகு கொடைக்கானல் சுற்றுலா தளம் போல் குகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் வெறும் 9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் படம் வெளியான இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 25 மடங்கு லாபத்தை மஞ்சுமல் பாய்ஸ் கொடுத்துள்ளது.

200 கோடி வசூல் செய்த மஞ்சுமல் பாய்ஸ்

அதாவது இதுவரை கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்து இருக்கிறது. மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மஞ்சுமல் பாய்ஸ் ரெகார்ட் பிரேக் செய்துள்ளது. மேலும் இப்போதும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளுமே ஹவுஸ் ஃபுல்லாக இருந்து வருகிறது. ஆகையால் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு லாபத்தை பெற இருக்கிறது.

அதோடு மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் பிரேமலு படமும் இப்போது வசூலை வாரி குவித்து வருகிறது. சமீபத்தில் பிரேமலு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.