1000 கோடி அள்ளுமா குட் பேட் அக்லி.. வீரம் முதல் விடாமுயற்சி வரை கலெக்சன் ரிப்போர்ட்

Ajith : ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.

நேற்றைய தினமே இதற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில் பல தியேட்டர்களில் 99 சதவீதம் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது. மேலும் இதன் ட்ரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெறுகிறது.

அஜித்தின் சினிமா கேரியரில் வீரம் தொடங்கி விடாமுயற்சி வரை கலெக்சன் ரிப்போர்ட்டை பார்க்கலாம். சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் உருவானது தான் வீரம். இந்த படம் 74.75 கலெக்ஷன் செய்தது.

அடுத்ததாக வெளியான என்னை அறிந்தால் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 88.5 கோடி வசூலை ஈட்டியது. இதைத்தொடர்ந்து ஆக்சன் படமாக வெளியானது வேதாளம். இப்படம் 119 கோடி வசூலை அள்ளியது.

வீரம் முதல் விடாமுயற்சி வரை கலெக்ஷன் ரிப்போர்ட்

வேதாளம் கூட்டணியில் உருவானது தான் விவேகம் படம். இப்படம் 121 கோடி வருவாயை கொடுத்தது. அஜித்தின் கேரியரில் தூக்கிவிட்ட படமாக அமைந்தது தான் விசுவாசம். இந்த படம் தியேட்டரில் பட்டையை கிளப்பிய நிலையில் 180 கோடி வசூலை கொடுத்தது.

அடுத்ததாக அஜித்தின் கிராப் இறங்கி நேர்கொண்ட பார்வை படம் 100.25 கோடி கொடுத்தது. மேலும் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் 152 கோடி கலெக்சன் செய்தது.

எச் வினோத், அஜித் கூட்டணியில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்து துணிவு. இந்த படம் 194.5 கோடி வசூல் செய்து அஜித்தின் கேரியரில் அதிக கலெக்ஷன் கொடுத்த படமாக மாறியது. கடைசியாக வெளியானது தான் விடாமுயற்சி படம்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் 137 கோடி வசூலை பெற்றது. ஆனால் குட் பேட் அக்லி படத்திற்கு எதிர்பார்ப்பு கூடுதலாக இருப்பதால் கண்டிப்பாக 500 கோடியை தாண்டி வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்