திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விதி இப்பதான் வேலையை சரியாக பார்க்கிறது.. சிங்கமுத்துக்கு பின் வடிவேலுவை சீண்டும் தமாசு நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை முதல் நாளே பெற்றது. இந்தப் படத்தில் வடிவேலுவுடன், சிவாங்கி, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, மனோபாலா, ஷிவானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.

இருப்பினும் இந்த படம் படு தோல்வியை சந்தித்த நிலையில் ஜனவரி 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த சூழலில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வி அடைந்ததற்கு வடிவேலுவின் விதி தான் காரணம் என்று நகைச்சுவை நடிகர் முத்துக்காளை விமர்சித்துள்ளார்.

Also Read: தனக்கு தானே குழி தோண்டி கொண்ட வடிவேலு.. பல சோதனைக்குப் பின்னும் விழும் பலத்த அடி

விதி தன் வேலையை சரியாக செய்திருக்கிறது. வடிவேலு உடன் நடிக்கும் போது அவர் நன்றாக வர வேண்டும் என்றுதான் நினைத்து பல படங்களில் நடித்தோம். ஆனால் இப்போது இருப்பவர்கள் தான் நன்றாக வர வேண்டும் என்று நினைத்தது தான் அவருடன் நடித்தார்கள். அதுதான் படத்தின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

மேலும் வடிவேலு எப்படி நடித்தாலும் அதை ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற மிதக்கம். ஆனால் பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் தூக்கி எறிய கூடிய மனநிலையின் மக்கள் இருக்கின்றனர் என்பது வடிவேலுக்கு இப்போது புரிந்திருக்கும். அதேசமயம் நல்லதை மக்கள் ரசிக்கிறார்கள்.

Also Read: 5 வருடம் கதறவிட்டாலும் திருந்தாத வடிவேலு.. சிங்கமுத்து சொன்னதுலாம் சரிதான் போல

அத்துடன் நம்பிக்கையும் திறமையும் இருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என்று யோகி பாபுவை முன் உதாரணமாக காட்டியிருக்கிறார். ஏற்கனவே வடிவேலுவுடன் 12 வருட கூட்டாளி சிங்கமுத்துவை தொடர்ந்து இப்போது நகைச்சுவை நடிகர் முத்துக்காளை வடிவேலு உடைய உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை அறிந்த ரசிகர்களுக்கு திகைப்பு ஏற்பட்டது. அத்துடன் வடிவேலுக்கு காம்பேக் கொடுக்கும் திரைப்படமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அவருக்கு சரியான பாடம் புகட்டியது என்று அவர் மீது கொலைவெறியில் இருக்கும் சக நகைச்சுவை நடிகர்கள் அந்தப் படத்தின் தோல்வியை வைத்து குளிர் காய்கின்றனர்.

Also Read: வடிவேலு ஜோடிக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. மறுத்ததால் கேமராமேன் செய்த வேலை

Trending News