Kisukisu: நகைச்சுவை நடிகரும் இந்த காமெடி நடிகையும் சேர்ந்தால் திரையில் மிகப்பெரிய பிரளயமே ஏற்படும் என்பதற்கு ஏற்ப ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள். அதனாலேயே தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குவிய ஆரம்பித்தது. அத்துடன் அந்த நகைச்சுவை நடிகருக்கு அதிக வாய்ப்புகள் வந்ததால் அவருக்கு ஜோடியாக இந்த காமெடி நடிகையை நடிப்பதற்கு இழுத்துக் கொண்டார்.
ஆனால் இதற்குப் பின் அந்த காமெடி நடிகையை டார்ச்சர் பண்ணி பல அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு வலுக்கட்டாயமாக ஒத்துக்க வைத்திருக்கிறார். இதனாலேயே அந்த காமெடி நடிகையின் வாழ்க்கை சின்னா பின்னமாக சிதறிவிட்டது. பின்பு படங்களில் இவர்கள் நடிக்கும் பொழுது நகைச்சுவை நடிகரை அடிக்கும் மாதிரியான காட்சிகள் வந்தால் இருக்கும் கோபத்தை உண்மையாகவே தீர்க்கும் அளவிற்கு அந்த காமெடி நடிகை வெளுத்து வாங்கி விடுவாராம்.
Also read: பல பேரோட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்ட 34 வயது நடிகை
பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் இந்த காமெடி நடிகையின் சகவாசமே வேண்டாம் என்று முடிவு பண்ணிய நகைச்சுவை நடிகர் தனி பெர்பாமன்ஸை கொடுக்க ஆரம்பித்து விட்டார். அத்துடன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் நான் நடிக்க வேண்டும் என்றால் அந்த காமெடி நடிகை இந்த படத்தில் நடிக்க கூடாது என்று சொல்லும் அளவிற்கு வன்மத்துடன் நடந்திருக்கிறார்.
அதனாலையே கொஞ்ச காலம் அந்த காமெடி நடிகைக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தனி மரமாக போய்விட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏணி பிடித்து ஏறும் அளவிற்கு அவருடைய ட்ராக்கை மாற்றிக் கொண்டு மற்றொரு நகைச்சுவை நடிகருக்கு இணையாக நடிப்பை பின்னி பெடல் எடுத்து விட்டார்.
ஆக மொத்தத்தில் அந்த காமெடி நடிகையை தன்னுடைய வளர்ச்சிக்காக கருவேப்பிலை மாதிரி பயன்படுத்தி கடைசியில் தூக்கி எறிந்து விட்ட கொடுமை தான் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர்கள் இருவருமே ஒரு கட்டத்திற்கு பிறகு தற்போது வரை இன்னும் சேர்ந்து நடிக்காமல் தனித்தனியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள்.