ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கும்பிடு போடாதது ஒரு குத்தமா?. சூட்டிங் ஸ்பாட்டில் விசித்ராவை கதறவிட்ட காமெடியன்

Actress Vichitra: 90களில் கிளாமர் குயின் ஆக ரவுண்டு கட்டிய நடிகை விசித்ரா, சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது மறுபடியும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ரா, இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்துவமான விளையாட்டை காட்டுகிறார். இதனால் இவரை குறித்த செய்திகளும் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதிலும் ஒரு காமெடி நடிகருக்கு கும்பிடு போடாததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் விசித்ராவை அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பிரபு- கனகா ஜோடி சேர்ந்த படம் தான் பெரிய குடும்பம். இந்த படத்தில் போஸ்ட் மாஸ்டராக காமெடி நடிகர் கவுண்டமணி நகைச்சுவை கேரக்டரில் நடித்தார்.

இந்த படத்தில் விசித்ரா பாப்பம்மா என்ற கிளாமரான காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் கவுண்டமணிக்கும் விசித்ராவுக்கும் ஒரு சில காட்சி இடம் பெற்றிருக்கும். ஆனால் அதில் நடிக்க முடியாது என கேஎஸ் ரவிக்குமாருடன் கவுண்டமணி அடம் பிடித்துள்ளார். இதற்கு அவர் சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது.

Also Read: படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

விசித்ராவை அசிங்கப்படுத்திய கவுண்டமணி

விசித்ரா நடிக்கும் படங்களில் சிறிய காமெடி கிளாமர் ரோல் தான் கிடைக்கும் என்பதால் சூட்டிங் ஸ்பாட் வந்ததும் தனக்குரிய காட்சியை நடித்து முடித்துவிட்டு கிளம்பி விடுவாராம். யாருடனுமே உட்கார்ந்து அரட்டை அடிக்க மாட்டாராம். நைட் பார்ட்டி, பப் என எதிலுமே கலந்து கொள்ள மாட்டாராம்.

அப்படிதான் பெரிய குடும்பம் படப்பிடிப்பிலும் இருந்திருக்கிறார். ஆனால் கேஎஸ் ரவிக்குமார் விசித்ராவை கவுண்டமணியிடம் அழைத்துச் சென்று, வணக்கம் சொல்லுமா என்று சொல்லியிருக்கிறார். உடனே விசித்ரா காலையிலேயே நான் கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொல்லிட்டேனே என கூறினார். இருந்தா என்ன, மறுபடியும் ஒருமுறை வணக்கம் சொல் என்று கேஎஸ் ரவிக்குமார் வற்புறுத்தி இருக்கிறார்.

விசித்ராவும் உடனே கவுண்டமணிக்கு காலை வணக்கம் என சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான் பிரச்சினை முடிந்தது கிளம்புமா என கேஎஸ் ரவிக்குமாரும் சொன்னாராம். எப்பயோ ஒருமுறை விசித்ரா கவுண்டமணியிடம் வணக்கம் வைக்கவில்லையாம். அதனால் இந்த திமிரு பிடித்த பெண்ணுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணி பிரச்சனை செய்திருக்கிறார். ஒருவழியா கேஎஸ் ரவிக்குமார் தான் இருவரையும் சமாதானப்படுத்தி அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தாராம்.

Also Read: மாயாவின் தந்திரத்தை கண்டுபிடித்த விச்சு.. அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா.? துரோகி

Trending News