ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

காமெடி நடிகர் முகத்தில் சிகரட்டை ஊதிய சைக்கோ நடிகை.. கழுத்தைப் பிடித்து தள்ளிய இயக்குனர்

சினிமாவில் திமிர் பிடித்த பல நடிகைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எந்த லிஸ்டிலும் சேர்க்க முடியாத அளவுக்கு ஒரு நடிகையும் இருக்கிறார். சொல்லப்போனால் ஒரு சில திரைப்படங்களில் சிறு கேரக்டர்களில் தலையை காட்டிய அந்த பிரபலம் தன்னைத்தானே உலக அழகி ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசி பப்ளிசிட்டி தேடுவார்.

அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு நான்தான் நம்பர் ஒன் நடிகை. என்னை பார்த்து தான் மற்ற நடிகைகள் மேக்கப் போடுகிறார்கள். அவர்களுக்கு ஃபேஷன் பத்தி நான் தான் சொல்லிக் கொடுத்தேன் என்று வண்டி வண்டியாக ரீல் சுற்றுவார். இப்படி பப்ளிசிட்டி பைத்தியமாக இருக்கும் அவருக்கு பாவப்பட்டு ஒரு இயக்குனர் தன்னுடைய திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

Also read:அந்தரங்க மோகத்தால் வழி மாறிய பிரபலம்.. 20 லட்சத்தை சுருட்டிக்கொண்டு கல்தா கொடுத்த கள்ள காதலி

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தெரியாத அந்த பிரபலம் சூட்டிங் ஸ்பாட்டில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சூட்டிங் இடைவெளியில் அனைவரும் பார்க்கும் படியாக சிகரெட் பிடித்திருக்கிறார். இதை பார்த்த பலரும் அந்த சைக்கோவிடம் எதற்கு வாயை கொடுக்க வேண்டும் என்று அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு காமெடி நடிகர் மட்டும் இது தப்பு என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நடிகை சிகரட்டை பிடித்து அவர் முகத்திலேயே அந்த புகையை ஊதியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த காமெடி நடிகர் உடனே இயக்குனரிடம் தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியிருக்கிறார்.

Also read:பலவந்தமாக அனுபவித்ததால் மிரட்டி 10 லட்சம் ஆட்டையை போட்ட நடிகை.. தானா வந்துதிருந்தா ஒரு லட்சம் தானாம்!

இதனால் அந்த இயக்குனர் நடிகையை கூப்பிட்டு கண்டித்ததோடு மட்டுமின்றி பாவம் பார்த்து வாய்ப்பு கொடுத்தால் இப்படியா நடந்துக்குவ, ஒழுங்கா இடத்த காலி பண்ணு என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக சூட்டிங் ஸ்பாட்டை விட்டு விரட்டி இருக்கிறார். கிடைத்த வாய்ப்பும் பறிபோனதால் நொந்து போன நடிகை ஆனாலும் திமிருடன் தான் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.

அதன் பிறகு பட வாய்ப்புகளும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அந்த நடிகை, வாய் திமிரு குறையாமல் பேசியதால் சட்டரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தார். சில காலம் சோசியல் மீடியாவை பரபரப்புடன் வைத்திருந்த அந்த நடிகை இப்போது எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

Also read:பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட மாஸ் ஹீரோ.. பிரச்சனையிலிருந்து தப்பிக்க பிளான் போடும் நடிகர்

Trending News