வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வடிவேலு காட்டில் அடைமழை.. மடியிலே வந்து தவம் கிடக்கும் அதிர்ஷ்டம்

வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் எவ்வளவு அவப்பெயர் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் சம்பாதித்து விட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த வடிவேல் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டதால், இவருக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டனர்.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு படாதபாடு பட்டுவிட்டார். இப்பொழுது திமுகாவிடம் சரணடைந்தார் . உதயநிதியை சந்தித்து நான் உங்கள் ஆதரவாளன் என்பது போல் காட்டிக்கொண்டு வருகிறார். அதன் பின் அவருக்கு படங்கள் எண்ணிக்கை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும், வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கின்ற மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவை நடித்து வருகிறார்.

அதுபோக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் ரெட்டர்ன்ஸ் திரைப்படம் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது.

மேலும் சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப் போகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் வடிவேலு நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி கௌதம் வாசுதேவ் மேனன் இவரை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் எடுக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

ஆக மொத்தம் நாலைந்து படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கவிருக்கும் வடிவேலுக்கு தற்போது நல்ல காலம் கூடி இருப்பதுடன், அவர் மடியில் அதிர்ஷ்டம் வந்து தவம் கிடைக்கிறது.

Trending News