திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

8 வருடங்களாக காணாமல் போன காமெடி நடிகர்.. தூக்கி விட்டவரை கண்டுகொள்ளாத விஜய்

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ள காமெடி நடிகர் ஒருவர் 1992ல் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதன்பின் படிப்படியாக தனது திறமையால் வளர்ந்தார். மேலும் விஜய்யுடன் பல படங்களில் நடித்து அவருக்கு நண்பராகவும் செல்லப் பிள்ளையாகவும் வலம் வந்தார்.

அதன்பின் 2014 ஆம் வருடத்திற்கு பிறகு அவர் காணாமல் போய்விட்டார். இப்போது விஜய்கூட, தான் நடிக்கும் படங்களில் கூப்பிடவில்லை. மேலும் இவர் கிட்டத்தட்ட 8 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை விஜய்யுடன் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த தாமு தான் அது.

Also Read: விஜய் கலெக்ஷன் அள்ளிய முதல் 50, 100 கோடி படங்கள்.. வசூல் மன்னனாக கிடைத்த அங்கீகாரம்

தாமு விஜயுடன் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, நாளைய தீர்ப்பு, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்திலும் விஜய்-தாமு காம்போ பக்காவாக வொர்க் அவுட்டாகி சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இருக்கும்போதே மாயக்குரல் செய்வதில் வல்லவரான தாமு, உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலை விழாக்களில் பங்கேற்று தனது திறமையை உலகெங்கும் காட்டினார். இவர் சுமார் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.

Also Read: பிரபல பாடகர் மரணம், 11 மொழிகளில் 3 ஆயிரம் பாடல்கள்.. அனைத்து தமிழ் பாட்டும் சூப்பர் ஹிட்!

இப்படி திரைத்துறையில் இருந்து விலகி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 2021 ம் ஆண்டு ‘தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது’ அளித்துள்ளது

இவர் சினிமாவில் நிறைய படங்களில் விஜயுடன் தான் சேர்ந்து நடித்து அவருடைய ஆரம்பகால படங்களில் அவரை தூக்கி விட்டவர். என்றாலும் விஜய், தளபதி ரேஞ்சுக்கு உச்சம் பெற்ற பின் காமெடி நடிகர் தாமு சினிமாவில் விலகிய போது அதை கண்டுகொள்ளாதது சிலருக்கு வருத்தம் அளிக்கிறது.

Also Read: 365 நாட்கள் ஓடி சாதனை.. விஜய், அஜித்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற 7 படங்கள்

Trending News