திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் மாணவ, மாணவிகளை தூண்டி விட்டுள்ளார்.. எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்

Actor Vijay: சோசியல் மீடியாவில் மட்டுமல்ல புதிய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கலந்துகொண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது விஜய் மாணவ மாணவிகளை தூண்டி விட்டிருப்பதாகவும், அவருடைய அரசியல் பயணத்தை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு பேசி பிரபல தயாரிப்பாளர் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

80களில் தயாரிப்பாளரும் இயக்குனருமாக பணியாற்றிய கே ராஜன் விஜய்யை குறித்து மேடையில் பேசி பரபரப்பு கிளப்பி இருக்கிறார். நடிகராக இருப்பவர்களுக்கு அரசியல் ஆசையை காட்டியதில் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். அவரின் அரசியல் வளர்ச்சியை பார்த்த பின்பு தான், பல நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான ஆசை ஏற்பட்டது என்பது நிதர்சமான உண்மை.

Also Read: முதல் படத்திலேயே படுதோல்வியை சந்தித்த டாப் 5 நடிகர்கள்.. பயங்கர ப்ளாப்பான தளபதியின் நாளைய தீர்ப்பு

அப்படி எம்ஜிஆருக்கு அடுத்ததாக விஜய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கே ராஜன் தெரிவித்திருக்கிறார். குடிசைகளில் இருக்கும் ஏழைகளின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து அவர்களுக்கு வேண்டியதை செய்ததனால் தான் எம்ஜிஆர் மக்கள் மனதில் உச்சத்தில் இருந்தார். ஆனால் குடிசையை நிமிர்ந்து கூட பார்க்காமல், அங்கு செல்வதற்கு அச்சப்பட்டு கூச்சப்பட்டால் ஏழை மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஆகையால் எம்ஜிஆரை விஜய் அப்படியே பின்பற்ற வேண்டும். விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து மிகுந்த சந்தோசத்தில் இருப்பதாகவும், அவர் வந்த பிறகு நிலைத்து நிற்க வேண்டும். அவர் அரசியலில் வருவதற்கு முன்பே எம்ஜிஆரின் யுக்திகளை இப்போதிலிருந்து பயன்படுத்த துவங்கிவிட்டார். எம்ஜிஆர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்வார். அங்குள்ள மக்களை சந்திப்பது, கல்யாணங்களில் கலந்து கொண்டதால்தான் மக்களால் கொண்டாடப்பட்ட தலைவராக திகழ்ந்தார்.

Also Read: ராசி இல்லை என ஓரம் கட்டப்பட்ட விஜய் பட ஹீரோயின்.. மார்க்கெட் சரிந்ததால் எடுத்த அதிரடி முடிவு

அதே போல் தான் இப்போது விஜய்யும் எம்ஜிஆர் போல் வருவதற்கான அறிகுறித் தெரிகிறது. அவர் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் போதே குழந்தைகளை தொட்டிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண் எடுத்து, முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஒரு சில அறிவுரைகளை சொன்னார்.

அந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் விஜய்யின் கன்னத்தை பிடித்து கிள்ளுவதும், அவரை கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்துவதும் போன்ற உணர்ச்சிபூர்வமான நிகழ்வுகளும் அரங்கேறியது. இப்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் அவர் பேசியதும், அவர் மாணவ மாணவிகளை எவ்வாறு முகம் சுளிக்காமல் அரவணைத்தார் என்ற வீடியோவும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுவாக 16 மற்றும் 18 வயது உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் முதல் வாக்குரிமை விரைவில் வரப்போகிறது. இதைக் குறி வைத்து விஜய் அந்த மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து பாராட்டி பரிசு பொருள்களை வழங்கி இருக்கிறார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

இதன் மூலம் அவர்களுடைய தொகுதிகளில் விஜய் மேலும் பிரபலம் அடைய வாய்ப்பு இருக்கிறது. அதிலும் விஜய் 600/600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் அளித்தார். இந்த பணம் எல்லாம் வீணாய் போகாது. இதெல்லாம் நஞ்சை நிலத்தில் விதைத்த நெல் போல செழிப்புடன் வளர போகிறது. இப்படி விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை மாணவ மாணவிகளின் மூலம் சிறப்பாக துவங்கி இருப்பதாக தயாரிப்பாளர் கே ராஜன் பெருமையுடன் பேசினார்.

ஆனால் இவரே பலமுறை மேடைகளில் விஜய்யை குறித்து தரக்குறைவாக பேசியதுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் விஜய் நம்ம வீட்டு பிள்ளை, அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது தான். அதே சமயம் அரசியலுக்கு வந்தபின் மக்களின் நலனுக்காக பணியாற்றுங்கள். மக்கள் உங்களை கை கொடுத்து தூக்கி விட்டால், அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்றும் விஜய்யின் அரசியல் பயணத்தை பாராட்டி வரவேற்று இருக்கிறார்.

Trending News