வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Jio-க்கு அதிகரித்த போட்டி.. இந்திய வரலாற்றில் அதிக கடன், முகேஷ் அம்பானிக்கே இந்த நிலைமையா?

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மிக அதிகத் தொகையை கடன் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்தியாவின் மிகபெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இது தனியார் துறை நிறுவங்களில் மிகப்பெரிய நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 1966 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியால் 14 லட்சம் பண முதலீடு செய்து துவங்கப்பட்டு ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று 28 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கொண்ட நிறுவனமாக வானுயர உயர்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ், துணி, நெட்வொர்க், ரீடெயில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கோலோட்சி வருகிறது.

பார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் பெரும் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும் ரிலையன்ஸ் திகழ்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் மதிக்கப்படும் முமேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகராக செயல்பட்டு வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவருக்கும், அதானி குழும தலைவராக கெளதம் அதானிக்கும்தான் தொழிலிலும் வணிகத்திலும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரின் உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்த்தியடைந்த நிலையில், இருவரும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தனர். அதன்படி, அம்பானியின் சொத்து மதிப்பு 2.18 பில்லியன் டாலர்கள் சரிந்து புளூம்பெர்க்கின் உலகளவிலான பில்லியனர் பட்டியலில் 17 வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இது, ரிலையன்ஸ் நிறுவன பங்குதார்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் ஷேரின் மீது முதலீடு செய்த மூதலீட்டாளார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் மற்றொரு பெரும் பணக்காரரான அதானியின் சொத்து மதிப்பு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி காரணமாக 2.27 பில்லியன் டாலர்கள் குறைந்து 93 பில்லியன் டாலர்களுடன் 18 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீதம் சரிந்த போதிலும், ஆண்டுமுழுவதும் அவர் நிறுவனம் லாபம் அடைந்திருப்பதாகவும், அம்பானியில் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக இருப்பதாகவும், ஆண்டிற்கு 507 பில்லியன் டாலர்கள் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் எண்ணெய், தொலைத்தொடர்புத்துறை, ரீடெயிலில் கவனம் செலுத்தி வரும் ஜியோ, ஏஐ மற்றும் தொழில் நுட்பத்திலும் கால்பதிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் வணிகத்தில் அம்பானியில் சாதுர்யம், எதிர்காலத் தொழில்நுட்பங்களின் மீதான முதலீடு, போட்டிகளை சமாளித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் திறன் இதெல்லாம் வணிகத்திலும், இந்தியாவில் பொருளாதாரத்தையும் உலகச் சந்தையில் முதன்மைப்படுத்தி வருகிறது.

இந்திய வரலாற்றில் அதிக கடன் பெற்ற அம்பானி

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோவின் ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்த நிலையில் ரூ.4 ஆயிரம் கோடியில் நடந்த பிரமாண்ட திருமணமான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண செலவிற்காக உயர்த்தப்பட்டதா இக்கட்டணம்? என மீம்ஸ்களும் வைரலானது. ட்ரோலும் செய்யப்பட்டது. இப்படி ஆடம்பரமும், சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வரும் அம்பானி இந்திய வரலாற்றில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிக கடனை பெற்றார் என தகவல் வெளியாகிறது.

ஜியோவுக்கு பல கோடி பயனர்களாக உள்ள நிலையில், முகேஷ் அம்பானி, நாடு முழுவதும் ஜியோவின் 5 ஜி சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 5 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளதாகவும், இது இந்திய மதிப்பில் ரூ.42 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. இந்தக் கடன் என்பது 60 க்கும் மேற்பட்ட வங்கிகளால் ஆதரிக்கப்பட்டு, வெளிநாட்டு நாணயக் கடன்களாக அளிக்கப்பட்டதாகவும், மொபைல் நெட்வோர்க் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக தொழிலை மேலும் வலுப்படுத்த மேலும் 2 பில்லியன் டாலர்களை திரட்டவும் அம்பானி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனம் ஆகும் அம்பானி!

இந்தியாவின் தொழில்துறையில் ஜாம்பாவானாக இருக்கும் முகேஷ் அம்பானி வெற்றிகரமான முதலீட்டாளர். அவர் தொட்டதெல்லாம் வெற்றி என்பதால் இக்கடன்கள் மூலம் ஜியோ நொட்வொர்க்கை போட்டியாளர்கள் யாரும் நெருங்கமுடியாத அளவு பலப்படுத்தி மேலும் முன்னணி நிறுவனமாக கொண்டு வந்து தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவார் என பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.

Trending News