வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஸ்கூல் டாஸ்க்கில் வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்.. சிவா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, கோபத்தில் சத்யா

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஸ்கூல் டாஸ்க் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கம் போல் ஒவ்வொரு சீசனிலும் ஸ்கூல் டாஸ்க் கொஞ்சம் கலகலப்பாகவும், பழைய ஞாபகங்களை நினைத்துப் பார்க்கும் அளவிற்கும் இருக்கும். ஆனால் நேற்று ஆரம்பித்த ஸ்கூல் டாஸ்க் போராக இருக்கிறது என்பதற்கு ஏற்ப அதில் இருக்கும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை கொட்டும் விதமாக வன்மத்தை காட்டி வருகிறார்கள்.

அதாவது இதில் சில போட்டியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகளாகவும், ஒரு சிலர் ஆசிரியர்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஸ்கூல் நிர்வாகியின் மகளாக வர்ஷினி தேர்வாகி இருக்கிறார். இவர் விவாகரத்து செய்து வெளியே அனுப்பிய மாப்பிள்ளை வைஸ் பிரின்ஸ்பல் என்ற கேரக்டரில் அருண் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக ஃபாரினில் இருந்து வந்து மாரல் கிளாஸ் எடுக்கும் டீச்சராக ஜாக்லின் இருக்கிறார்.

அடுத்ததாக தமிழ் டீச்சர் மஞ்சரி மற்றும் லவ் ஃபெயிலியர் ஆகி pt டீச்சராக இருக்கும் ஜெஃப்ரி போன்று பல்வேறு கேரக்டரில் பலர் மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று முடிந்து போன டாஸ்க்கில் யார் சரியாக பண்ணவில்லை என்ற கேள்வி எழும்பியது. அப்பொழுது பல போட்டியாளர்கள் சிவக்குமார் மீது குற்றச்சாட்டு வைத்தார்கள்.

அதாவது இதில் சிவகுமார் வாட்ச்மேன் கேரக்டரில் இருந்தாலும் இரவில் பெண்கள் அறையை அடிக்கடி எட்டிப் பார்க்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஜாக்லின் மீது தீபக் குற்றச்சாட்டு வைத்தார். இதை அடுத்து ஜாக்லின் மாரல் கிளாஸ் எடுக்கும் பொழுது நமக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பது அவசியம் இல்லை. நமக்கு தெரிந்திடுச்சு என்பதற்காக அறிவாளியும் இல்லை என்று தீபக்கை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாக ஜாக்லின் சொல்கிறார்.

இதை கேட்ட தீபக் சூப்பர் என்று நக்கலாக பதிலளிக்கிறார். இதற்கு அடுத்தபடியாக எந்த இடத்தில் பேசணும் எங்கு என்ன செய்யணும் என்பதை கவனித்து பேச வேண்டும் என்பதற்கு ராணவ்வை எடுத்துக்காட்டாக சொல்கிறார். ஆனால் இதற்கு ராணவ் பதில் அளிக்கும் விதமாக இது உங்களுக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஜாக்லின், சத்யாவிடம் லீடர்ஷிப் குவாலிட்டி ஒருத்தர் கிட்ட இருக்கின்றது என்றால் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் பொழுது சத்தியா இதை நீங்கள் ரிவ்யூ மாதிரி எனக்கு அட்வைஸ் கொடுக்க தேவையில்லை என்று சொல்கிறார். உடனே ஜாக்லின் உங்களுக்கு பிடிக்கலை என்றால் வெளியே எழுத்து போங்கள் என்று சொன்னதும் சத்யா கோபப்பட்டு கிளாசை விட்டு வெளியே போய் விடுகிறார்.

ஆக மொத்தத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண வேண்டும் என்று யாரும் யோசிக்கவில்லை. எப்போதெல்லாம் கேப் கிடைக்குதோ அப்போதெல்லாம் மற்ற போட்டியாளர்களை வச்சு செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் அவர்களுடைய வன்மத்தை கொட்டிக் கொண்டு வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் சற்று தோய்வடைந்து வருகிறது.

Trending News