வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யின் கடைசி இரண்டு படங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சம்பளம்.. விடாக்கண்டன் போல் அஜித் முழிக்கும் முழி

Confirmed salary for Vijay’s last 2 films in Kollywood: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளம் தமிழ் திரைத்துறையின் வளர்ச்சிக்கா? அல்லது வீழ்ச்சிக்கா? என்பது தெரியவில்லை. பொதுவுடமை தத்துவத்தை படங்களில் உயர்த்தி பிடிக்கும் நடிகர்கள் தானும் அதே சிந்தனையுடன் தான் நடந்து கொள்கிறேன் என்று ஒருபோதும் கூறுவதில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் வந்தவரை லாபம் என்று ஹை டிமண்டிலேயே நடித்து வருகின்றனர் எனலாம். சினிமாவில் ஒரு சில கதைகளை தவிர மற்றவை அனைத்தும்  நடிகர்களை மாற்றி மாற்றி போட்டு அரைத்த மாவையே அரைப்பது போல்தான் உள்ளது.

இதனால் தான் என்னவோ தனக்கு இருக்கும் இமேஜை பயன்படுத்தி அதிக சம்பளத்தை  பிக்ஸ் பண்ணுகிறார்கள் நடிகர்கள். திரைக்கதையில் சமரசம் செய்யும் நடிகர்கள் கூட சம்பள விஷயத்தில் சமரசம் செய்வதில்லை. பட தயாரிப்பில் மொத்த செலவில் 60% முதல் 70% தொகை நடிகரின் சம்பளத்திற்காகவே ஒதுக்கப்படுகிறது.

Also read: ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் 60% ஓட்டு விஜய்க்கு தான்.. அடித்து சொல்லும் அரசியல் சாணக்கியன் கணிப்பு

தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்கள் நடித்தால் வசூலில் போட்டதை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் நடிகர்களின் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை. அரசியல் வருகையை உறுதி செய்த தளபதி இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியல் பணியை மேற்கொள்ளப் போவதாக உறுதியளித்துள்ளார்

இதனால் அதிகம் எதிர்பார்க்கபடும் விஜய்யின் கடைசி 2 படங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சம்பளம் மட்டுமே 250 கோடி. அதில் ஒரு படம் RRR படம் தயாரித்த dvv  என்டர்டைன்மெனுக்காக பண்ணப் போகிறார். சம்பளத்திற்கு தயாரிப்பு நிறுவனமும் ஓகே சொல்லியாச்சு. இதற்கு அடுத்த படத்திற்கும் சம்பளம் 250 கோடி தானாம். கதை மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் இழுபறியில் உள்ளது. எப்படி இருந்தாலும் 250 கோடி தான் ஒரு பைசா கூட குறைக்க மாட்டார்.

நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை மட்டுமே வைத்து அவர்களின் முன்னணித்தரத்தை மதிப்பிடும் நிலையில், அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்திற்கு150 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அடுத்ததாக ஏகே 63க்கு 160 கோடி சம்பளம் என பேசப்படுகிறது. விஜய்யுடன் ஒப்பிடும்போது, ஏணியில் அல்ல ஏரோபிளேன்ல போனாலும், விஜய்யை அஜீத் எட்ட முடியாது போலவே.

Also read: அரசியலா எனக்கா.? சும்மாவே கிடைக்க மாட்டீங்களா டென்ஷனாகி அஜீத் வெளியிட்ட அறிக்கை

Trending News