செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்

ஆரம்ப காலகட்டத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த யோகி பாபு இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார். அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் காமெடியனாக கலக்கி வரும் இவர் கதையின் நாயகனாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இவர் தற்போது நிற்க கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வாரிசு, ஜெயிலர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் சில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

Also read: சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை அவமானப்படுத்திய நடிகை.. ரெட் கார்டு இல்லாமலேயே காலி செய்த வைகை புயல்

இதனால் ஒரு காலத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பிய பல நடிகர்களுக்கு வாய்ப்புகள் வருவது குறைந்துள்ளது. அதிலும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு யோகி பாபுவால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ஏனென்றால் மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனைத்து பட வாய்ப்புகளும் யோகி பாபுவுக்கு செல்கிறதாம்.

இதனால் வடிவேலு யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்குவதற்காக சில வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறாராம். அதன்படி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் யோகி பாபு குறித்து சர்ச்சையான விஷயங்கள் பேசப்பட்டது. மேலும் தாதா என்ற திரைப்படத்தில் நான் நாலு சீனில் மட்டும்தான் நடித்திருக்கிறேன் என்று யோகி பாபு தெரிவித்தார் ஆனால் அவர் படம் முழுவதும் வரும்படி அதிக காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் கூறி வருகிறார்.

Also read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

இப்படியாக யோகி பாபுவின் மேல் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவர் கால்சூட் போன்ற விஷயங்களில் சொதப்பி வருவதாகவும் ஒரு தகவல் பரவுகிறது. இப்படி அவரைச் சுற்றி வரும் இந்த சர்ச்சைகளுக்கு பின்னால் வடிவேலு தான் இருக்கிறாராம். அவருடைய பேச்சை கேட்டு தான் சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

யோகி பாபுவின் மார்க்கெட் இறங்கினால் தான் வடிவேலுவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலை இப்போது இருக்கிறது. ஏனென்றால் வடிவேலுக்கு அடுத்தபடியாக யோகி பாபு வளர்ந்து விட்டார் என்ற பேச்சுகள் வெளிப்படையாகவே கிளம்பியுள்ளது. இதை தாங்க முடியாததால் தான் அவர் சைலன்டாக பல வேலைகளை பார்த்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: யோகி பாபுவை டப்பிங் தியேட்டரில் அடித்த இயக்குனர்.. பதிலுக்கு பழிவாங்கிய சம்பவம்

Trending News