செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகேஸ்வரியுடன் குழாயடி சண்டைக்கு தயாராகும் போட்டியாளர்.. உச்சகட்ட மோதலில் பிக்பாஸ் வீடு

விஜய் டிவியின் டிஆர்பியை எகிற வைத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் புதுப்புது சண்டைகளால் களைகட்டிக் கொண்டிருக்கிறது. தற்போது தனித்தனி குழுவாக பிரிந்து விளையாடி வரும் போட்டியாளர்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துப் போகாமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அதுவே சில முக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இருவருக்கும் இடையே நடந்த சண்டை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் சைலன்டாக இரு சண்டை கோழிகள் வீட்டுக்குள் குழாயடி சண்டையை ஆரம்பிக்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து ஓவர் வாய் துடுக்காக பேசி வருகிறார் வி ஜே மகேஸ்வரி.

Also read : யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

அதனாலேயே பலரும் இவரிடம் சரிவர பேசாமல் ஒதுங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் டான்ஸ் மாஸ்டர் சாந்தி. கிச்சன் குழுவில் ஒன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் இவர்களுக்குள் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனையில் முட்டிக்கொண்டு விடுகிறது. அதனால் இருவரும் ஒருவரை பற்றிய ஒருவர் புறம் சொல்லி கொண்டிருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க சாந்தி மறைமுகமாக மகேஸ்வரியின் பெயரை குறிப்பிட்டு கருத்து சொல்லி இருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது மகேஸ்வரி அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து கொண்டிருந்த அவர்களின் பிரச்சனை நேற்று தீவிரமாக வெடிக்கும் அளவுக்கு சென்றது. அதாவது மகேஸ்வரிக்கு நெற்றியில் அடிப்பட்டு நன்றாக வீங்கி இருந்தது.

Also read : கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

இதனால் போட்டியாளர்கள் பலரும் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனால் சாந்தி மட்டும் அதை கண்டுகொள்ளாமல் சமையல் வேலையிலும், சாப்பிடுவதிலும் பிஸியாக இருந்தார். பிறகு பல மணி நேரம் கழித்து கடமைக்காக மகேஸ்வரியிடம் சென்று என்ன ஆச்சு என்று கேட்டார். இதனால் கடுப்பான மகேஸ்வரி ரொம்ப சீக்கிரம் வந்து விசாரிக்கிறீங்க என்று நக்கலாக கேட்டார். அதை கேட்டு கோபமடைந்த சாந்தி ஏதோ ஒன்றை கூறிவிட்டு பின் அமுதவாணனிடம் சென்று அதை புறம் பேசிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகும் கூட இவர்கள் இருவரும் முறைத்தபடி திரிந்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சாந்தி இறங்கி வந்து மகேஸ்வரியிடம் ஒரு விளக்கம் கொடுத்து சமாதானமாக முயன்றார். ஆனாலும் மகேஸ்வரிக்கு அவர் மேல் இருக்கும் கோபம் தீரவில்லை என்பது அவருடைய முகபாவனையிலேயே நன்றாக தெரிந்தது. இதனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் இவர்களுக்குள் ஒரு பெரிய யுத்தமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் பிக் பாஸ் வீடு கொஞ்சம் கொஞ்சமாக கலவர பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.

Also read : பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மர்மம்.. அலறியடித்து வெளியே ஓடிய பிரபலம்

Trending News