வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டிவி நல்ல உருட்டுறீங்க.. பிக் பாஸ் வீட்டில் ப்ளூடூத் பயன்படுத்திய போட்டியாளர், ரெட் கார்ட் கன்ஃபார்மா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சண்டை, பிரச்சனை, சச்சரவு என தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் அவற்றையெல்லாம் மறந்து சில நிமிடங்களில் இணைந்து விடுகிறார்கள். அவ்வாறு போட்டியாளர்களுக்குள் நட்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில் கடந்த சீசன்களில் இல்லாதவாறு இந்த சீசனில் பிக் பாஸ் விதியை மீறி அத்துமீறல் ஏற்பட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் மொபைல் போன், ப்ளூடூத் போன்று வெளியில் உள்ள நபர்களை தொடர்பு கொள்ளும் படியான சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கு நாள், நேரம் கூட தெரியாது.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

ஆனால் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டினுள் ப்ளூடூத்தை ஒரு போட்டியாளர் பயன்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மணிகண்டன் ப்ளூடூத் ஷூவை பயன்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மைனா நந்தினி மற்றும் மணிகண்டன் இருவரும் பேசி உள்ளனர்.

ஆகையால் மணிகண்டனின் ஷூவை பிக் பாஸ் பரிசோதனைக்காக வாங்கி உள்ளார். இது பிக் பாஸ் விதிப்படி தவறான செயல் ஆகும். ஆகையால் மணிகண்டனுக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read : பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி கதறவிட்ட ஆண்டவர்.. பறிக்கப்பட்ட வெற்றி, தரமான சம்பவம்

ஏற்கனவே நடிகர் சரவணன் ஒருமுறை பெண்களை தவறாக பேசியதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். அதேபோல் தற்போது மணிகண்டனின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் இவரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் விசாரணையில் மணிகண்டன் ப்ளூடூத் பயன்படுத்தியது உண்மையானால் கண்டிப்பாக அவர் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

Trending News