ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தொடர் தோல்விகளை சந்தித்த சூர்யா.. அசராமல் அடுத்த 2 படங்களுக்காக எடுத்த முடிவு

ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூர்யா தியேட்டரில் ரிலீஸ் செய்த படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் நல்ல கதை என்றாலும் மக்களிடம் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சற்று அப்செட்டில் இருக்கும் சூர்யா அடுத்த படத்திற்காக மெனக்கெட்டு வருகிறார்.

சூர்யா இப்பொழுது வாடிவாசல் வெற்றிமாறனுடனும், சிறுத்தை சிவா கூட்டணியில் மற்றுமொரு படம் கமிட்டாகி இருக்கிறார். இதில் சிவாவின் படம் மற்ற நடிகர்கள் தேர்வு பட்டியல் ரெடி ஆகிக் கொண்டிருக்கிறதாம். வெற்றிமாறன் வாடிவாசல் படம் மதுரையில் சூட்டிங் நடைபெறுகிறது.

அது மட்டுமின்றி இந்த இரு படங்களும் சூர்யாவிற்கு நிச்சயமாக வெற்றி தேடித்தரும். இரண்டு பேருமே வெற்றி இயக்குனர்கள். இந்த 2 படங்களும் தியேட்டரில் தான் ரிலீசாகிறது. சூர்யா எப்பொழுதும் ஒடிடியில் ஒரு தனி அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த படங்கள் ஒடிடி பக்கம் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

சூர்யாவின் மனதில் தியேட்டர் பக்கம் சென்றால் படத்திற்கு நிறைய விஷயங்களில் மெனக்கிட வேண்டியதிருக்கும். ஒடிடியில் எளிதாக விட்டுவிடலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இதை வெற்றி மாறனிடம் கூறியிருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

சிறுத்தை சிவாவும் படத்தை ஒடிடியில் விடும் இயக்குனர் இல்லை. அதனால் அவரும் அந்தப் பக்கம் போக மாட்டார். இதனால் சூர்யாவின் அடுத்த 2 படங்களும் கட்டாயம் தியேட்டரில்தான் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சூர்யா இந்த இரண்டு படங்களையும் விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே வாடிவாசல் படத்திற்கு 3 மாதங்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி மற்றும் அடுத்த வருட பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம் என்று சூர்யாவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News