புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நம்பியவர்கள் எல்லாம் கைவிட்ட பரிதாபம்.. தொடர்ந்து 4 ஃப்ளாப் கொடுத்த பிரபாஸ்

Continuously 4 Flop movies for Actor Prabas: ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். வலுவான கதைக்களம், பிரம்மாண்டமான செட், கம்பீரமான நடிப்பு என ரசிகர்கள் அனைவரையும் படத்துடன் சேர்த்து பாகுபலிஆக நடித்த பிரபாஸையும் கொண்டாட வைத்தது.

பாகுபலியின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெத்துடன் கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் விதியின் வசத்தால் என்னவோ பிரபாஸிற்கு அவர் நடித்த படங்கள் கை கொடுக்காமல் தோல்வியை தழுவி வருகின்றன.

சகோ: பாகுபலிக்கு பின் பிரபாஸ் ஹிந்தியில் நடித்த முதல் படம். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டது. பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்குகள், வாகனங்களுடன் கூடிய சண்டைக் காட்சிகள் என அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சகோ திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் போனதே தவிர, எதிர்பார்த்து அளவு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.

ராதே ஷ்யாம்: அதிக ரொமான்ஸுடன் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த திரைப்படம் ராதே ஷ்யாம். பிரதமருக்கு ஆருடம் சொல்லும் பிரபாஸ் தன் காதல் கதையை கொஞ்சம் சரியாக சொல்லி இருக்கலாம். எந்த ஒரு விறுவிறுப்போ சுவாரசியமோ இல்லாமல் காதலுக்கு உண்டான தாக்கத்தை ஏற்படுத்த தவறி ரசிகர்களை ஏமாற்றி இருந்தார் பிரபாஸ்.

Also read: அந்த தமிழ் நடிகர் தான் வேணும்னு அடம் பிடித்த பிரபாஸ்.. 3 மடங்கு சம்பளம்னு காட்டிய பச்சைக்கொடி

ஆதிபுரூஷ்: ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதை என்றாலும் பிரபாஸ் நடிப்பதாலேயே அதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.  இத்திரைப்படத்தில் பல்வேறு கிராபிக்ஸ்களை புகுத்தி இது பிரபாஸ் தானா என்று உன்னிப்பாக கவனிக்கிற மாதிரி ஆகிவிட்டது. ராவணனுக்கு கொடுத்த அழுத்தத்தை கூட ராமனுக்கு கொடுக்காமல்,  பிரபாசை அந்த ஆதி புருஷனும் கை விட்டுருந்தார் எனலாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பாதி கூட அடையாமல் போனது வருத்தத்தின் உச்சம்.

சலார்: தொடர்ந்து இப்படி பிளாப்பே கொடுக்குறீங்களே என்று வருத்தம் அடைந்த ரசிகர்களை கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தான் பிரபாஸின் அடுத்த இயக்குனர் என்ற செய்தி சற்று ஆறுதல்  படுத்தியது. படத்தைப் பார்த்த பிரபாஸ் ரசிகர்கள் பிரசாந்த் நீலும் ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று புலம்பித் தவித்தனர்.

பிரம்மாண்ட பட்ஜெட், ஆக்சன் என எல்லாத்தையும் கைவிட்டு தற்போது மாருதி இயக்கத்தில் ரொமான்டிக் காதலுடன் காமெடியில் தெறிக்கவிடும் “தி ராஜா சாப்”  என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பிரபாஸிற்கு காதல்  மற்றும் காமெடி செட்டாகுதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: ‘A’ சர்டிபிகேட்டை கொடுத்து இடியை இறக்கிய சென்சார் போர்டு.. மண்டை காஞ்சி போய் பிரபாஸ் சொன்ன வார்த்தை

Trending News