சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆகி வந்ததுமே அதற்கான மீம்ஸ் ரெடி ஆகிறது. இப்பொழுது படங்கள் ட்ரெண்டாகுவதை விட பெரிய அளவில் மீம்ஸ் ட்ரெண்டாகி வருவது பேஷன் ஆக இருக்கிறது. மேலும் இப்ப வந்த படங்களுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் வழியாக படத்தை கலாய்த்து வருகிறார்கள்.
பொதுவாக மீமிஸ் என்றாலே அதற்கு மன்னனாக இருப்பவர் வடிவேல் தான். வடிவேல் வைத்து வராத மீம்ஸ் இருக்கவே முடியாது. அந்த வகையில் இவரை வைத்து ரோலக்ஸ்கும், லியோக்கும் சம்பந்தமாக ஒரு மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
Also read: வளர்ச்சி பிடிக்காத வடிவேல்.. சூட்டிங்கை கேன்சல் செய்து கிளம்பிய அவலம்
அதே மாதிரி விஜய்யின் லியோ கேரக்டரும் பேசப்பட போகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்துல வடிவேல் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.
அதில் வடிவேலுக்கு அப்ரசண்டிகளாக விஜய் மற்றும் சூர்யா நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இப்பொழுது ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார்கள். அந்த பிரண்ட்ஸ் படத்தை வைத்து ஒரு மீம்ஸ் டிரெண்டாகி வந்திருக்கிறது. அந்த மீம்ஸ்ல் வடிவேல் உண்மையாகவே அவர்களைப் பார்த்து சொல்வது போல அமைந்திருக்கிறது.
Also read: லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?
அந்த மீம்ஸ்சில் வடிவேல், விஜய்யும் மற்றும் சூர்யாவையும் பார்த்து இவர்கள் இரண்டு பேரும் என்னதான் இப்பொழுது டானாக இருந்தாலும் ஒரு காலத்தில் என்னிடம் வேலை பார்த்த அப்ரசண்டிகள் தானே என்று கலாய்த்து சொல்வது போல போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. இது விஜய்க்கு வந்த லியோ படத்தின் சோதனையாக இருக்கிறது.
விஜய், சூர்யாவை கலாய்த்த காண்ட்ராக்டர் நேசமணி வைரல் போஸ்டர்
ஏற்கனவே லியோ படத்திற்கு வந்த ப்ரோமோவை பார்த்து இது விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கேரக்டருக்கு சம்பந்தமாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுடைய இரண்டு கேரக்டர்களும் லியோ படத்தில் ஒரே மாதிரியாக அமைகிறது. மேலும் இது சம்பந்தமான மீம்ஸ் ரெடி ஆகி இணையதளத்தில் டிரெண்டாக்கி வருகிறது.