ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

திருமணமானவரை டேட்டிங் செய்த சர்ச்சை நாயகி.? பகிரங்கமாகவே ஒத்துக்கொண்ட சம்பவம்

Controversial heroine who dated till married: இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் எந்த விஷயத்தையும் மறைப்பது கிடையாது. பொதுவெளியில் மொத்தமாகவே போட்டுடைக்கின்றனர். அதிலும் பாலிவுட்டில் சினிமாவை தாண்டி அரசியல் கருத்துக்களை துணிச்சலுடன் முன் வைக்க கூடிய நடிகைக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவிற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

இவர் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் தொடர்ந்து படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அந்த சர்ச்சைக்குரிய நடிகை கங்கனா ரானாவத். இவர் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டிட்டு இருக்கிறார்.

இதை அவருடைய அப்பாவே சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கங்கனா ரானாவத் முதல் வரிசையில் அமர்ந்து, ‘ஜெய் ராம்’ என ஆரவாரத்துடன் கத்தினார்.

Also Read: RDX பாம்புன்னு பீலா விட்டு செஞ்ச தில்லாலங்கடி வேலை.. சந்திரமுகி 2 ஆல் விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

அதே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வந்த ‘ஈசி மை ட்ரிப்’ இணை இயக்குனர் நிஷாந்த் பிட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி நாலா பக்கமும் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு சோசியல் மீடியாவிலும் இவர்களை இருவரும் டேட்டிங் செய்வதாக செய்திகளை கிளப்பி விட்டனர்

உடனே கங்கனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தவறான தகவலை பரப்பாதீர்கள். நிஷாந்த் பிட்டி-க்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. நான் வேறொருவரை டேட்டிங் செய்கிறேன். அதை சரியான நேரம் வரும்போது நானே என்னுடைய வாயால் சொல்கிறேன்.

அதுவரை எங்களை இணைத்து தவறாக பேசாதீர்கள். ஒருவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டால், அவருடன் அந்தரங்க உறவில் இருப்பதாக அர்த்தமல்ல. இதனால் அவருடைய குடும்பம் தான் பாதிக்கும். சம்பந்தமே இல்லாத எங்கள் இருவரை இணைத்து வைத்து பேசாதீர்கள்’ என்று பதிவிட்டு, மொத்த கிசுகிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

kangana-ranaut-instra-cinemapettai
kangana-ranaut-instra-cinemapettai

Also Read: துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

Trending News