ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய், உருட்டும் விஷால்.. 50 கோடி கல்லா கட்டியும் காற்றில் பறக்கும் மானம்

Actor Vishal: விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மார்க் ஆண்டனி வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளிலேயே படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த நாட்களின் வசூலுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்தது.

அந்த வகையில் இப்படம் வெளியான 5 நாட்களிலேயே 55 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் விஷால் இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாக்குறுதியை விவசாயிகளுக்காக கொடுத்திருந்தார்.

Also read: அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

என்னவென்றால் தன் படம் வெளியாகி வெற்றி பெற்றால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் என கணக்கிட்டு உங்களுக்கு உதவுவேன் என்று கூறியிருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

அதை தொடர்ந்து மார்க் ஆண்டனி இப்போது நல்ல லாபம் பார்த்து வருவதால் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என்ற கேள்விகள் விஷாலை சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் படம் வெளியான மறுநாளே அவர் அனைவருக்கும் நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

Also read: விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்

அதில், சொன்னபடி விவசாயிகளுக்கு நான் நிச்சயம் உதவுவேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த வீடியோ வெளியாகி இத்தனை நாட்கள் கடந்த பின்னும் அதற்கான எந்த ஏற்பாடும் நடந்தது போல் தெரியவில்லை. இதைத்தான் இப்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சொன்னால் மட்டும் போதுமா செயலில் காட்ட வேண்டாமா என்ற கமெண்டுகளும் சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஷால் உடனடியாக இதற்கான தீர்வு எடுத்தால் நல்லது. இல்லை என்றால் அவருடைய மானம் காற்று பறக்கும் அபாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா .. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

- Advertisement -

Trending News