Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ஜெயிலர் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடி வெற்றிவாகை சூடி இருக்கிறது. அதைத்தொடர்ந்து சக்சஸ் மீட், பத்திரிகையாளர் சந்திப்பு என அனைத்தும் நடைபெற்றது. ஆனால் அதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை.
இதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் ரிலீஸ் ஆகும் முதல் நாளே அவர் இமயமலை சென்றது தான். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு அங்கு சென்ற ரஜினி எப்போது திரும்பி வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார், உத்தரப்பிரதேச முதல்வரை சந்தித்த நிகழ்வு பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் இந்த சந்திப்பு நிகழ்ந்த போது ரஜினி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். அது குறித்த போட்டோக்களும், வீடியோக்களும் தான் இப்போது சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
72 வயதாகும் ரஜினி தன்னைவிட 21 வயது குறைந்த முதல்வர் காலில் விழுந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒருமுறை நம்மை படைத்த கடவுள், அம்மா, அப்பா காலில் தான் விழ வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்படி இருக்கும்போது தலைவர் எதற்காக இப்படி செய்தார் என ரசிகர்கள் மிகுந்த குழப்பத்துடன் விவாதித்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டார் குறித்த எதிர்மறை கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தன்னைவிட 21 வயது குறைந்த முதல்வர் காலில் விழுந்த ரஜினி
ஆனால் அவர் யோகி என்பதால் தான் ரஜினி மரியாதை நிமித்தமாக ஆசி பெற்றாரே தவிர வேறு எதுவும் கிடையாது என சிலர் இந்த சம்பவம் குறித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்ன விஷயம் கிடைக்கும் பிரச்சினையை கிளப்பலாம் என்று இருக்கும் சிலருக்கு இந்த விஷயம் நல்ல ஒரு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது.
Also read: படத்துல தான் நான் ஆக்ரோஷ வில்லன்.. ஒரு படி மேலே போய் நிஜ ஹீரோவான ரஜினி பட நடிகர்