வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

மர்மமாக இருக்கும் நடிகையின் மரணம்.. விடாமல் துரத்தும் சர்ச்சை

Gossip: சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் இருக்கும்போது கிசு கிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இறந்த பின்பும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது 20 வருடத்திற்கு பிறகு நடிகை குறித்து செய்தி வெளியாகியிருக்கிறது. 

பேரழகு கொண்ட நடிகை நடித்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிட்ட காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார். அணைகிற நெருப்பு தான் பிரகாசமாக எரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிது காலம் தான் சினிமாவில் அவரால் நீடிக்க முடிந்தது. 

ஏனென்றால் புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒரு விபத்தினால் உயிரிழந்து விட்டார். இந்த செய்தி அப்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சூழலில் அவர் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு சௌந்தர்யாவுக்கு நடந்தது விபத்து அல்ல கொலை என்று கூறப்படுகிறது. 

நடிகையின் மரணம் குறித்து வந்த சர்ச்சை 

அதுவும் பிரபல நடிகர் ஒருவர் சொத்துக்காக தான் நடிகையை கொன்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சௌந்தர்யாவின் மரணம் குறித்து மர்மமாக இருந்து வருகிறது. 

இப்போது பணத்திற்காகத் தான் நடிகை கொல்லப்பட்டாரா என்ற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து போலீசார் இப்போது விசாரணை தொடங்கி இருக்கின்றனர். 

பல வருடங்களாக புதைக்கப்பட்டிருந்த நடிகையின் மரண மர்மம் இப்போது வெளி வருகிறதா என பலரும் காத்திருக்கின்றனர். மேலும் நடிகைக்கு உண்மையாகவே விபத்து ஏற்பட்டதா அல்லது கொலையா என்பது விரைவில் தெரியவரும் என நம்பலாம்.

Trending News