செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நடிகையுடன் ஏற்பட்ட சர்ச்சை.. அதிரடியாக நடந்த குக் வித் கோமாளி 4 எலிமினேஷன்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மென்ட் ஷோவான விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கப்பட்ட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

முதல் வாரம் கிஷோர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் 2-வது ஆளாக ஒருவர் வெளியேற உள்ளார். இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதல் இருந்தே அங்கிருக்கும் நடிகைகளுடன் ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பினார்.

Also Read: ஊத்தி மூடப் போகும் குக் வித் கோமாளி சீசன் 4.. அதிரடியாக வெளியேறிய பிரபலம்

இதனால் எரிச்சல் அடைந்த விஜய் டிவி அவரை சீக்கிரம் வெளியேற்றிவிடலாம் என்ற அதிரடி முடிவை எடுத்து இந்த வாரம் எலிமினேட் செய்துள்ளனர். மேலும் இவர் என்னதான் பார்ப்பதற்கு பயில்வான் ஆக இருந்தாலும் அங்கிருக்கும் கோமாளிகளை மோசமாக நடத்துகிறார்.

இது ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் டேஞ்சர் ஜோனில் காளையன், விஜே விஷால், விசித்ரா மூவரும் இருக்கின்றனர். இவர்கள் மூவருள் காளையன் தான் இந்த வாரம் படு கேவலமாக சமைத்து நடுவர்களால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

இவர் வெளியேறியதற்கு ரசிகர்கள் எந்த வித கலக்கமும் அடையவில்லை. ஏனென்றால் இந்த சீசனில் ஓவர் அலப்பறை காட்டிக் கொண்டு, நடிகைகளுடன் சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருந்தவர் சென்று விட்டார் என செம ஹாப்பியாக இருக்கின்றனர்.

அதிலும் சினிமாவில் ரவுடித்தனம் காட்டுவது போல் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலும் கலகலப்பாக இல்லாமல் அங்கேயும் ரவுடியாகவே நடந்து கொண்டதால் இவரை யாருக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இவர் சென்ற பிறகு இனிமேலாவது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று காளையன் எலிமினேட் ஆனதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

Trending News