சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் குக் வித் கோமாளியில் வெளியேறும் நபர் இவர் தான்.. சூடு பிடிக்கும் டிக்கெட் டு பினாலே ரவுண்டு

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் ஷோவான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது நான்காவது சீசனை கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. 12 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் இதுவரை ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

அப்படி இதுவரை கிஷோர் காளையன், ராஜ் ஐயப்பன், விஷால் மற்றும் ஷெரின் என அடுத்தடுத்து ஐந்து பேர் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 7 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே இந்த வாரம் டிக்கெட் டு பினாலே ரவுண்டு நடைபெறுகிறது.

Also Read: ஒரேடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வர வர உங்க போக்கு சரியில்ல மேடம்

இதில் சிறப்பு விருந்தினராக பிச்சைக்காரன் 2 படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி வருகை தருகிறார். இவ்வாறு டிக்கெட் டு பினாலே சூடு பிடிக்கும். இந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு நபர் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். இந்த வாரம் பனானா பேமிலி ரவுண்ட் நடைபெறுகிறது.

வாழை மரத்தில் உள்ள வாழைப்பழம், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றில் ஒன்றை வைத்து தான் போட்டியாளர் சமைக்க வேண்டும் என்ற ட்விஸ்ட் உடன் ரவுண்டை துவங்கினர். சமீபத்தில் தான் திடீரென்று இரண்டு வைல்டு கார்டு கண்டஸ்டேன்ஸ் என்ட்ரி கொடுத்தனர்.

Also Read: விரக்தியிலிருந்து மீண்டு வந்த விஜய் டிவி நடிகர்.. பாலா, புகழ் போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த காமெடியன்

அதில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் போட்டியாளராக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இவர் இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் சுமாராக சமைத்து நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். எனவே கிராண்ட் ஃபினாலே-விற்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட்டை மீதமிருக்கும் 6 போட்டியாளர்களில் ஒருவர்தான் தட்டி தூக்கப் போகின்றனர்.

அது மட்டுமல்ல பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்திருக்கும் விஜய் ஆண்டனி சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மேலும் ஸ்பெஷல் ஆக்கி உள்ளார்.

Also Read: என்னடா இது விஜய் டிவி பொழப்பு இப்படி நாறிவிட்டது.. நடிகைகளை தெருத்தெருவாக தேடும் நிலைமை

Trending News