யோகி பாபுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி நடிகை.. காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போகும்!

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. ஒரு காலத்தில் சமையல் நிகழ்ச்சி என்றாலே அதை பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி நகைச்சுவையை உள்ளே சொருகி இளைஞர்களையும் பார்க்க வைப்பதுதான் குக் வித் கோமாளி. இதனால் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, தற்போது 3வது சீசன் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்கும் குக்குகளும் கோமாளிகளும் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கொடி கட்டி பறக்கின்றனர். அப்படி பிரபலமான சிவாங்கி, புகழ் வரிசையில் குக் வித் கோமாளி சீசன் 2-வில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா, இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியின் அவளும் நானும், செந்தூரப்பூவே ஜீ தமிழில் முள்ளும் மலரும் சன் டிவியில் மின்னலே போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின், தற்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கில்’ என்ற புதிய படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான ஏ1, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே ஜான்சன், இந்த படத்தை இயக்கி ஏ1 புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார். மெடிக்கல் மிராக்கிள் படத்தின் யோகி பாபு ஓலா டிரைவராக படம் முழுவதும் அரசியல் காமெடியை தெறிக்க விடும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் யோகிபாபு, தர்ஷா உடன் மன்சூர் அலிகான், கல்கி, சேசு, மதுரை முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.

தற்போது தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழு உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, எப்போதுமே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவ்வபோது தர்ஷா குப்தா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு  ரசிகர்களை கதிகலங்க வைத்ததால் அவர் காட்டிய கவர்ச்சிக்கு படவாய்ப்பு வராமலா போகும் என கலாய்த்துக் தள்ளுகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →