Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்தி பிக்பாஸுக்கு போன குக் வித் கோமாளி பிரபலம்.. நம்மூர் பொண்ணுக்காக சல்மான் கான் செஞ்ச விஷயம்!

இந்தி பிக்பாஸுக்கு போன குக் வித் கோமாளி பிரபலம்.. நம்மூர் பொண்ணுக்காக சல்மான் கான் செஞ்ச விஷயம்!

Bigg Boss 18: நேற்றைய தினம் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. எதிர்பார்த்த போட்டியாளர்கள், எதிர்பார்க்காத போட்டியாளர்கள் என அத்தனை பேரும் ஆஜராகி விட்டார்கள். கமலஹாசன் இருந்த இடத்தில் விஜய் […]

Bigg Boss 18: நேற்றைய தினம் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. எதிர்பார்த்த போட்டியாளர்கள், எதிர்பார்க்காத போட்டியாளர்கள் என அத்தனை பேரும் ஆஜராகி விட்டார்கள். கமலஹாசன் இருந்த இடத்தில் விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்று எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால் முதல் நாள் முதல் எபிசோடிலேயே மக்கள் செல்வன் மக்களை இம்ப்ரஸ் செய்து விட்டார். எந்த பக்கம் பார்த்தாலும் பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனை பற்றி தான் பேச்சு. அதே நேரத்தில் சைலன்டாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

குக் வித் கோமாளி பிரபலம்

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் 18 வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனின் போட்டியாளர் மற்றும் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் கலந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ருதிகா நடிகர் சூர்யாவின் ஸ்ரீ மற்றும் மாதவனின் நல தமயந்தி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மறைந்த பழம் பெறும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாவார். ஸ்ருதிகா அவருடைய வெளிப்படையான பேச்சு மற்றும் குழந்தைத்தனத்தால் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.

அதிலும் குரேஷி ஒரு முறை ஸ்ருதிகா கெட்டபில் வந்து காமெடி பண்ணியதில் அவரோடு சேர்ந்து ஸ்ருதிகாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஸ்ருதிகா பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனில் கலந்து கொள்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் இந்தி பிக் பாஸில் பங்கேற்கிறார்.

நேற்று அறிமுக எபிசோடு நடந்த போது சல்மான்கான் இடம் சார் எனக்காக வணக்கம் தமிழ்நாடு என்று சொல்லுங்கள் என கேட்டிருந்தார். சல்மான் காணும் வணக்கம் தமிழ்நாடு என சொன்னார். இது தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது. நீங்கள் தைரியமாக விளையாடுங்கள் ஸ்ருதிகா , எங்களால் நிகழ்ச்சியை பார்க்க முடியாவிட்டாலும் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுகிறோம் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.