ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குக் வித் கோமாளி பைனல் லிஸ்ட்.. மீண்டும் வேலையை காட்டிய விஜய் டிவி

Cook With Comali Finalist: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஆகையால் ரசிகர்கள் மத்தியில் யார் பைனல் லிஸ்டில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எப்போதும் போல இதிலும் விஜய் டிவி தனது வேலையை காண்பித்துள்ளதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சியில் அவர்களது தொலைக்காட்சியில் வந்தவர்கள் தான் இறுதி வரை செல்வார்கள்.

Also Read : பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

இது பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே வெளிப்படையாகவே பலருக்கும் தெரிந்து விட்டது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதியில் விஜய் டிவியை சேர்ந்த ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோரை வெற்றியாளராக ஆக்கினர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சிவாங்கி பைனலுக்கு சென்று இருக்கிறார்.

இவர் கடந்த மூன்று சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். இந்த முறை வித்தியாசமாக சமையல் செய்யும் குக்காக பங்கு பெற்று இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஒருதலையாக இவருக்கு எல்லோரும் சப்போர்ட் செய்வது அப்பட்டமாக தெரிந்து வந்தது.

Also Read : ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

இந்நிலையில் குக் வித் கோமாளி பைனலை நெருங்கி உள்ள நிலையில், டிக்கெட் டு பின்னாலே என்ற சுற்றில் வெற்றி பெற்று விசித்திரா முதல் பைனல் லிஸ்ட்டாக தேர்வானார். இவரைத் தொடர்ந்து மைம் கோபி இரண்டாவது போட்டியாளராக தேர்வாணார். அதன்படி மூன்றாவது இடத்தை சிவாங்கி பிடித்திருக்கிறார்.

அதுமட்டும்இன்றி இந்த முறை பைனலுக்கு ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோரையும் சேர்த்து 5 பைனல் லிஸ்ட் தேர்வாகி இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியிலும் சிவாங்கியை தான் வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் உண்மையான திறமை இருந்தாலும் தன் தொலைக்காட்சியில் உள்ளவர்களை தான் வெற்றியாளர்களாக விஜய் டிவி அறிவித்து வருகிறார்கள் என்ற குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

Trending News