வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஊத்தி மூடப் போகும் குக் வித் கோமாளி சீசன் 4.. அதிரடியாக வெளியேறிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவுக்கு சுவாரசியமாக கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த மூன்று சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது நான்காவது சீசனும் கோலாகலமாக துவங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் படியாக சிவாங்கி இதில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Also read: சக்களத்தி சண்டையில் ஜெயிக்கப் போகும் பாக்யா.. இதுல கோபி தல உருள போவது கன்ஃபார்ம்

கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளியாக அனைவரையும் கவர்ந்த இவர் இப்போது சமையலிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். இப்படி நிகழ்ச்சியை வெற்றியடைய வைக்க விஜய் டிவி பல தந்திரங்கள் செய்தாலும் இந்த சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் பாலா இந்த முறை நிகழ்ச்சியில் பங்கு பெறாதது தான்.

மேலும் கோமாளியாக இருந்தவரும் போட்டியாளராக மாறிவிட்டதால் சுவாரஸ்யம் ரொம்பவே குறைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வழக்கம்போல புகழ் கொடுக்கும் அலப்பறைகள் இந்த முறை கொஞ்சம் ஓவர் என்ற ரீதியில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சிக்கு பல விமர்சனங்கள் வரும் நிலையில் அதிரடியாக ஒரு கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: அஞ்சாதே தயா போல மீண்டும் மிரட்டி உள்ள பிரசன்னா.. இணையத்தில் ட்ரெண்டாகும் இரு துருவம் 2 வீடியோ

அதாவது குக் வித் கோமாளியின் தூண் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்றவர் தான் மணிமேகலை. ஒவ்வொரு சீசனிலும் அவர் அடிக்கும் லூட்டி பார்ப்பவர்களை ரசித்து சிரிக்க வைக்கும். அதேபோன்று இந்த முறையும் அவர் பல கலாட்டாக்கள் செய்து அனைவரையும் மகிழ்வித்தார்.

ஆனால் தற்போது என்ன நடந்ததோ தெரியவில்லை மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பல சொதப்பல்கள் இருந்தது. அதில் இப்போது முக்கிய கோமாளியும் வெளியேறி இருப்பது நிகழ்ச்சியின் சுவாரசியத்தை குறைக்கும் என்று கூறுகின்றனர். ஒருவகையில் மணிமேகலை இந்த ஷோவை விட்டு விலகி இருப்பது நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

Also read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

Trending News