ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஆரம்பமாக போகுது குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!

Cook with Comali Season 5: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் இந்த சேனலுக்கு இணையாக யாரும் இல்லை. அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்கள் பல வெற்றிகளை அடைந்திருக்கிறது. முக்கியமாக பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டுக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஒருவிதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மன அழுத்தத்தை கொடுக்கும் அளவிற்கு இருக்கும். இதற்கு எதிர்மறாக மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காமெடிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு இருப்பது தான் குக் வித் கோமாளி. ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு கொஞ்ச மாதங்களிலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கி விடுவார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் முடிவடைந்ததால் குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பமாகப் போகிறது. தற்போது இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாயிருக்கிறது. அதில் யாருடைய பெயர் இடம் பெற்று இருக்குது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: பிக் பாஸ் அர்ச்சனா விஜய் டிவிக்கு கொடுத்த முதல் பேட்டி.. குதர்க்கமாக பதிலளித்த டைட்டில் வின்னர்

வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செப் தாமு மற்றும் வெங்கட் பட் வரப்போகிறார்கள். இதில் குக்காக சமைக்க வருபவர்கள் நடிகை வடிவுக்கரசி, நடிகை மாளவிகா மேனன் மற்றும் சீரியல் நடிகை டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக ஜொலித்து வரும் தீபா வெங்கட்.

இவர்களை தொடர்ந்து தம்பி ராமையாவின் மகன் மற்றும் அர்ஜுனனின் மருமகனுமான உமாபதி, அடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸின் மருமகளாக நடித்துவரும் மீனா, அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகளான அக்ஷிதா இவர்கள் அனைவரும் சமைக்கும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் டிவி அவர்களுடைய சேனலில் இருந்து வெளியிடுவார்கள். இதுபோக மற்ற போட்டியாளர்களின் லிஸ்ட் கூடிய விரைவில் இணையத்தில் வெளிவர இருக்கிறது. அத்துடன் வழக்கம்போல் இதில் கோமாளியாக விஜய் டிவி ஆர்டிஸ்ட்கள் வந்து கலக்கப்போகிறார்கள்.

Also read: டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்

Trending News