செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. போட்டியாளர்கள் லிஸ்டும் வெளிவர தொடங்கிவிட்டன.

ஷில்பா மஞ்சுநாத், மோனிகா, ராஜ லட்சுமி, கார்த்தி குமார் , செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஸ்ரீநிதி, சத்யா சீரியல் புகழ் ஆயிஷா, GP முத்து, ரக்சன், டிடி என சினிமா, யூடியூப் பிரபலங்கள் , நாட்டுப்புற பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என ஒரு வித்தியாசமான கூட்டணியில் இந்த சீசன் தொடங்க இருக்கிறது.

Also Read: பிக்பாஸ் வருவதற்கு 5 கண்டிஷன் போட்ட அமலாபால்.. வரவே வேண்டாம் என கூறிய விஜய் டிவி

பிக்பாஸில் இம்முறை சாமானிய மனிதர்களும் கலந்து கொள்ளலாம் என்பதற்கேற்ப யூடியூப் பிரபலமான ஜி பி முத்து இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார். ஜி பி முத்து ஏற்கனவே ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தடவை அவர் பங்கேற்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.

ஜி பி முத்துவை போலவே மற்றுமொரு யூடியூப் பிரபலமும் இந்த சீசனில் கலந்து கொள்கிறார். இவர் ஒரு படத்தை பார்த்து வித்தியாசமான விமர்சனம் கூறி மக்களிடையே பிரபலமானவர் கூல் சுரேஷ். கூல் சுரேஷ் தான் இப்போது பிக்பாஸ் கண்டஸ்டண்ட் லிஸ்டில் சேர்ந்திருப்பவர்.

Also Read: எங்களால அசிங்கப்பட முடியாது.. பிக் பாஸுக்கு ஆளில்லாமல் தெருத்தெருவாக அலைய போகும் விஜய் டிவி

கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர். காக்க காக்க, ஆய்த எழுத்து, படிக்காதவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சிம்புவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஒரு படம் ரிலீஸ் ஆனால் இளைஞர்கள் இவருடைய திரைவிமர்சனத்தை தான் தேடி வருவார்கள்.

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு இவர் கொடுத்து கொண்டிருக்கும் ப்ரமோஷன் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்ட். இதனால் இவர் ட்ரோலும் செய்யப்படுகிறார். கூல் சுரேஷ் பிக்பாஸிற்கு வந்தால் கண்டென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது.

Also Read: பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்.. முட்டி மோதிக் கொள்ளும் சிவாங்கி

Trending News