ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மேடையில் தொகுப்பாளினிடம் அத்துமீறி கேவலமான வேலை செய்த கூல் சுரேஷ்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

Cool Suresh: சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படத்தை விமர்சனம் செய்து சர்ச்சையின் மூலம் பிரபலமானவர் தான் கூல் சுரேஷ். அப்படிப்பட்ட இவர் தற்போது ஒரு சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபலமான வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த மன்சூர் அலிகான் தற்போது ஹீரோவாக நடிக்கும் படம் தான் சரக்கு.

இப்படத்தை இயக்குனர் ஜெயக்குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், வினோதினி, பயில்வான் போன்ற முக்கியமான கேரக்டர்களும் இதில் நடித்திருக்கிறார்கள்.

Also read: 5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா .. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

இதனைத் தொடர்ந்து இப்படம் தமிழ்நாட்டின் நிலைமையை மாற்றும் விதமாக இருக்கும். அந்த வகையில் மதுவை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட புரட்சிகரமான படமாக இருக்கும் என்று மன்சூர் அலிகான் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அத்துடன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் மன்சூர் அலிகான், பாக்யராஜ், பயில்வான் மற்றும் கூல் சுரேஷ் ஆகியவரும் கலந்து கொண்டார்கள்.

பொதுவாக கூல் சுரேஷ் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே சர்ச்சை கண்டிப்பாக வெடிக்கும் என்பதுதான் இவருடைய ராசி. அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் அத்துமீறலான ஒரு கேவலமான செயலை செய்து இருக்கிறார். அதாவது இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த தொகுப்பாளினிக்கு திடீரென்று கழுத்தில் மாலை போட்டு விட்டார்.

Also read: அங்க வச்சா நான் தான் சாகணும்.. லலித்திடம் சண்டை போட்ட தளபதி,இன்னுமா ஒரு முடிவுக்கு வரல

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியில் இருந்ததோடு, தொகுப்பாளினி மிகவும் கடுப்பாகி கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். அத்துடன் நான் மாலை போட்டதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் மிக மரியாதை உடன் வரவேற்பு செய்தற்காக நான் அவருக்கு கொடுத்த மரியாதை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இவர் செய்த இந்த ஒரு கேவலமான விஷயம் பத்திரிகையாளர்களிடம் அதிக கேள்வியை எழுப்பியது. இதை சமாளிப்பதற்காக மன்சூர் அலிகான் மேடையில் அனைவரது முன்னாடியும் பகிங்கரமாக கூல் சுரேஷை  மன்னிப்பு கேட்க வைத்தார். அவரும் கடைசியில் தங்கச்சி என்னை மன்னித்துக்கொள் நான் கண்டன்டுக்காக இப்படி பண்ணி விட்டேன் என்று கூலாக பதில் சொல்லிவிட்டார். இருந்தாலும் இவருடைய வெறித்தனமான நடவடிக்கைக்கு பலரும் அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்ட கூல் சுரேஷ்

cool-suresh
cool-suresh

Also read: பாக்யாவை காலி பண்ண நினைக்கும் திருட்டு கோபி.. எழிலிடம் கையும் களவுமாய் மாட்டிய ராதிகாவின் கணவர்

Trending News