Corparate getting info using food product nabati from the people: சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் சுய புத்தியுடன் பிழைப்பது என்பது போராட்டம் நிறைந்த ஒன்றுதான். நடைமுறை சூழலில் யாரும் தேடி வந்து ஏமாற்றுவதில்லை ஏமாற வேண்டி காத்து கிடப்பவர்களை கண்டு கொண்டு அவர்களின் ஆசையை தூண்டி தான் லாபம் அடைகின்றனர் இந்த கார்ப்பரேட் முதலைகள்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை ஆச்சரியமாக நோக்கி விட்டு பாக்கெட்டுகளில் அடைக்கும் உணவுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். அதை, “என் வீட்டு பிள்ளைகள் அதுதான் சாப்பிடும்” என்று கௌரவமாகவும் வெளிப்படுத்தி மகிழ்வது வீட்டு பெரியவர்களுக்கு ஆனந்தமான ஒன்று.
அப்படித்தான் ஒரு பெரியவர் கடைக்கு சென்று நபார்டி எனப்படும் வேபரை வாங்கியுள்ளார். ரெண்டு நபாட்டி வேபர் வாங்கினால் பத்து ரூபாய் கேஷ் பேக் என்று அதன் முன்புறம் எழுதி இருந்தது. அதனால் கடைக்காரரிடம் இன்னொன்று வாங்கி விட்டார். கடைக்காரரிடம் அண்ணாச்சி பத்து ரூபாய் என்னாச்சு? என்று கேஷ் பேக் பற்றி விசாரிக்க அவர் தந்த பதில் பெரியவருக்கு அதிர்ச்சியை அளித்தது.
Also read: மாஸ் நடிகருக்கு டாட்டா காட்டிய மில்க் நடிகை.. குடும்பம், குட்டின்னு இருந்தா சரிதான்
கேஷ் பேக்கை நீங்கள் யூபிஐ பயன்படுத்தி பெற்றுக்கொள்ளவும் என்று கூறிவிட்டார் கடைக்காரர். கேஸ் பேக் என்பது கடைக்காரர் கொடுப்பது அல்லவே। அந்த நபார்டி வேபரில் உள்ள வழிகாட்டுதலின்படி முதலில் அதில் கொடுத்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்ததும் லிங்க் அனுப்பப்பட்டது.
அதில் குறிப்பிட்ட வெப்சைட்டில் நுகர்வோரின் போன் நம்பர், பெயர், பத்து ரூபாய் கேஷ்பேக் பணத்தை கொடுக்க அக்கௌன்ட் நம்பர் என அவரது விபரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாங்கப்பட்டது கடைசியாக வெட்டப் போகும் ஆட்டிடம் சம்மதம் கேட்பது போல் நுகர்வோரிடம் விபரங்கள் வாங்கியதற்கான ஒப்புதலையும் வாங்கியது அந்த நிறுவனம்.
மக்களை முட்டாளாக்கி அவர்களின் தரவுகளை வேண்டுவது எதற்காக? மக்களே இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும் ஒரு நபாட்டி வாங்கினால் இன்னொரு நபர்ட்டி ஃப்ரீ என்று டைரக்டாக கொடுக்காமல் வியாபார தந்திரத்துடன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறது இந்த கார்ப்பரேட் கூட்டம் “இன்ஃபர்மேஷன் இஸ் பவர்ஃபுல்” அறிந்தவன் வாங்கிக்கிறான் அறியாதவன் கொடுக்கிறான். மக்களே கொஞ்சம் விழித்து கொள்ளவும்!
Also read: கலைஞர் விழாவில் நடந்த தப்புக்கு காரணமான 5 விஷயங்கள்.. இதுவரை பார்க்காத அவமானத்தை சந்தித்த ரஜினி