இந்திய ரயில்வே, உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். குறுகிய தூரம் முதல் நீண்ட தூரம் வரை எங்கும் பயணிக்க வழிவகை செய்யும் இந்திய ரயில்வே சேவைகள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் பல நன்மைகள் உள்ளன.
மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது பயணச் செலவுகள் குறைவு. அதே நேரத்தில் வசதி அதிகம், பஸ்சை விட சீக்கிரத்தில், ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு சென்று விடலாம்.. இப்பேர்ப்பட்ட ரயிலை உருவாக்க எத்தனை கோடி செல்வாகும் தெரியுமா?
ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு ரயிலில் ஜெனரல், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகள் போன்ற பெட்டிகள் இடம்பெற்று உள்ளன. இது தவிர, ரயில்களில் பேண்ட்ரி கார்கள், காவலர் அறைகள் உள்ளிட்டவை கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. பல வகையான, பல வசதிகள் கொண்ட ஏராளமான ரயில்கள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அடேங்கப்பா இத்தனை கோடியா?
பொது பெட்டி அதாவது ஜெனரல் கோச், தயாரிக்க சுமார் ரூ.1 கோடி செலவாகுமாம். ஸ்லீப்பர் கோச் ஒன்றின் விலை ரூ.1.5 கோடி. அதேபோல், ஏசி கோச் தயாரிக்க சுமார் ரூ.2 கோடி ரூபாய் செலவாகுமாம். மேலும், சராசரியாக ஒரு ரயில் இன்ஜினை உருவாக்க ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது. இறுதியில் ஒரு முழு ரயிலை உருவாக்க எத்தனை கோடி செலவாகும் என்று நினைத்தாலே தலையை சுற்றுகிறது.
குத்துமதிப்பாக 24 பெட்டிகள் கொண்ட ஒரு முழுமையான ரயிலுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை செலவாகும் என்று கூட சொல்லலாம்.. இத்தனை மதிப்புள்ள ரயில்களை, வருடா வருடம் புதிய புதிய தொழில்நுட்பத்துடனும் வசதியுடனும் வெளியிடுகிறது. இந்த ரயில்கள் மட்டும் இல்லையென்றால், இந்தியாவில் பாதி இந்தியர்கள் பயணிக்கவே மாட்டார்கள்..
என்னதான் இத்தனை கோடி, சிலவழித்தாலும், பாத்ரூம் மட்டும் மோசமாகவே தான் இருக்கிறது.. முதலில் அதில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.