சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா! பரபரப்பில் கல்யாணம் செய்து கொண்ட 6 நட்சத்திர ஜோடிகள்

Couples who fell in love got married in Tamil Cinema: நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் காதலை விதவிதமாக வித்தியாசமான கோணங்களில் கூறினாலும்  பழமைவாதிகள் பலர் காதலை எதிர்க்க தான் செய்கிறார்கள் இத்தகைய எதிர்ப்புகளை மீறி  கரம் கோர்த்த காதல் ஜோடிகள் பற்றி காண்போம்.

தேவயானி-ராஜகுமாரன்: உதவி இயக்குனராக பணியாற்றிய போது தேவயானிக்கு கொக்கி போட்டு உள்ளார் ராஜகுமாரன். தேவயானியின் பெற்றோர்கள் எதிர்த்த நிலையில்  தேவயானி சுவர் ஏறி குதித்து வந்து ரகசியமாக திருமணம்  செய்துள்ளார். திருமணம் முடிந்து 21 ஆண்டுகள் ஆன பின்பும் இவரது தம்பி மற்றும் நடிகர் நகுல் இவரிடம் பேச மாட்டாராம்.

பார்த்திபன்-சீதா: 1989 ஆண்டு வெளிவந்த புதிய பாதையின் மூலம் திரையிலும் நிஜ வாழ்விலும் இணைந்த ஜோடிகள் பார்த்திபன் மற்றும் சீதா. எந்த படப்பிடிப்பு ஆனாலும் தினமும் பார்த்திபனுடன் போன் செய்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாராம் சீதா. அவரது காதல் கதை ரொம்ப த்ரிலாக இருந்தது என்று சுஹாசினியுடன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

Also read: 20 வயது கம்மியான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி.. வருங்கால மனைவியின் வைரல் புகைப்படம்

ஸ்ரீதேவி-போனி கபூர்: பதினாறு வயதினிலே மயிலாக அறிமுகமான ஸ்ரீதேவி  நிழல் உலகில் ஜொலித்தாலும் அவரது  நிஜம் சோகம் நிறைந்ததாகவே உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் போனி கபூர் ஸ்ரீதேவியின் மீது வைத்த தீரா காதலால் அனைவரின் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீதேவியை கரம் பற்றினார்.

அனன்யா- ஆஞ்சநேயா: எங்கேயும் எப்போதும் நடிகை அனன்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான ஆஞ்சநேயாவை காதலித்தார். இது அனன்யாவின் பெற்றோருக்கு  பிடிக்காமல் போகவே காவல்துறையிடம் கம்ப்ளைன்ட் கொடுத்தனர். மேலும் அனன்யாவை வீட்டுக்காவலிலும் வைத்தனர்.  எதையும் கண்டுகொள்ளாது  காதலை வலுப்பெறச் செய்தார் அனன்யா.

நளினி-ராமராஜன்: உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே நளினி மீது காதல் வயப்பட்ட ராமராஜன் நளினிக்கு லெட்டர் கொடுப்பது, வர்ணிப்பது என பல வித்தைகளை இறக்கியுள்ளார். நளினியின் பெற்றோருக்கு தெரிந்து ராமராஜனை அடிக்கவே, இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சபதம் போட்டு எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்தாராம் நளினி.

விமல்-பிரியதர்ஷினி: களவாணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் மருத்துவரான பிரியதர்ஷினியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கரம் பிடித்தார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மனைவியை அரசியலில் இறக்கவும் ஆயத்தமானார் விமல். வாய்ப்பு கிடைக்காமல்  போகவே அடுத்த தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.

Also read: ராமராஜனை விவாகரத்து செய்ய முக்கிய காரணம் இதுதான்.. 20 வருடங்களாக புருஷன் இல்லாமல் பரிதவிக்கும் நளினி

Trending News