திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

Covid: எதே கோவிட் தடுப்பூசியால் ரத்தம் உறையுமா.? கடைசில என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க ஜி

Covid Vaccine: கொரோனா வியாதியையும், ஊரடங்கு காலத்தையும் யாராலும் மறக்கவே முடியாது. பல பேருடைய உயிர் இந்த நோயினால் காவு வாங்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு வருடம் மக்களை ஆட்டி படைத்த இந்த வியாதி மெல்ல மெல்ல மறைந்தது. அதிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு பரிந்துரையின் பெயரில் தடுப்பூசியும் போடப்பட்டது.

இப்பொழுது அதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்று காலையில் இருந்தே கோவிஷீல்ட் சோஷியல் மீடியா ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.

கோவி ஷீல்ட் தடுப்பூசி

கொரோனாவுக்கு எதிரான இந்த தடுப்பூசியை இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் தயாரித்தது. இது இந்தியா உட்பட பல நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஊசி போட்ட பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக ஜேமி ஸ்காட் என்பவர் இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இது தவிர 51 நாடுகள் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதன்படி சமந்தப்பட்ட நிறுவனம் சில ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

தடுப்பூசியின் பக்க விளைவுகள்

அதில் கோவி ஷீல்ட் தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அது மிகவும் அரிதான சமயங்களில் நடப்பது தான்.

அதாவது ரத்தம் உறைவது, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இது ரொம்பவும் அரிதான விஷயம் என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த விவரத்தை தி டெலிகிராப் ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பிரதமருக்கு எதிரான கருத்துக்களை இப்போது தெரிவித்து வருகின்றனர்.

அதில் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க. தேங்க்யூ மோடி ஜி போன்ற ஹேஷ் டேக்குகளும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஊசியால் ஹார்ட் அட்டாக் வரும் என்ற தகவலும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News