வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட்டர் நடராஜன்.. கேக் ஊட்டி மகிழ்ந்த வைரல் புகைப்படங்கள்

Actor Ajith: விடாமுயற்சி அப்டேட் வருகிறதோ இல்லையோ நாள் தவறாமல் அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி விடுகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அந்த வகையில் அஜித் கிரிக்கெட் வீரர் நடராஜன் உடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

அஜித்துடன் கிரிக்கெட்டர் நடராஜன்

natarajan-ajith-birthday
natarajan-ajith-birthday

முதல் போட்டியில் விளையாடிய இவர் தற்போது தனக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் அந்த அணி கொஞ்சம் தடுமாற்றமாக தான் இருக்கிறது.

நடராஜன் – அஜித்

ajith-natarajan
ajith-natarajan

இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று இரவு நடந்த பார்ட்டியில் அஜித்தும் கலந்து கொண்டது தான் ஹைலைட்.

பிறந்தநாள் கொண்டாடிய நடராஜன்

natarajan-ajith
natarajan-ajith

அதில் அவர் நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். அந்த போட்டோக்கள் தான் இப்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பார்ட்டியில் முத்தையா முரளிதரன் உட்பட பல வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் அஜித்தும் இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Trending News