வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

எந்த தெளிவும் இல்லாத விஜய்யின் அரசியல் தொடக்கம்.. TVK கட்சி குறித்து வந்த விமர்சனம்

TVK : விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் எதிர்பார்க்காத பல விஷயங்களை புதுவிதமாக விஜய் கொண்டு வந்துள்ளார். அவ்வாறு விஜய் செய்துள்ள மூன்று ஐடியா தற்குறித்தனத்தை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதாவது யூடியூபர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் 3 ஐடியா குறித்து ட்வீட் செய்திருக்கிறார். முதலாவதாக விஜய் மாநாட்டில் பேனர்கள் வித்யாசமாக இடம் பெற்றிருந்தது. திராவிடத்திற்காக ஈவே ராமசாமி, தேசியத்திற்காக காமராஜர், தலித் அரசியலுக்காக அம்பேத்கர் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பெண் ஆளுமைகளை வெளிக்காட்டும் விதமாக முக்குலோத்திற்காக வேலுநாச்சியார் மற்றும் வன்னியருக்காக அஞ்சலை அம்மாள் இன்னும் சில தலைவர்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக நினைப்பதாக மாரிதாஸ் கூறியிருக்கிறார்.

விஜய்யின் கட்சி குறித்து வந்த விமர்சனம்

vijay
vijay

அதாவது சேர, சோழ மற்றும் பாண்டியர் என்று வைத்தால் தனியாக மன்னர்களின் நிலப்பரப்பில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் போஸ்டர்களை வைத்துள்ளார். அடுத்ததாக இந்த மாநாட்டில் அஜித், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரின் போஸ்டர் ஒட்டி இருக்கிறது.

மேலும் இப்போது தமிழகத்தை ஆளும் கட்சியான திமுக அரசு பற்றியோ முன்பு ஆண்ட திராவிட அரசியல் பற்றியோ எதுவும் எதிர்த்து பேசவில்லை. நம்மாலும் மத்திய அரசுக்கு பட்டும் படாம எதிர்ப்பு காட்டி கட்சியை தொடங்குகிறார். இதில் எந்த தெளிவும் இல்லாமல் அரசியல் தற்குறித்தனத்தின் தொடக்கமாக தெரிகிறது.

ஆனாலும் வேறு வழி இல்லை. விஜய் இந்த மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பது இதிலிருந்தே யூகிக்க முடிவதாக மாரிதாஸ் கூறியிருக்கிறார். மேலும் விஜய்யின் இந்த மாநாடு மற்ற அரசியல் கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News