வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த கோடிக்கணக்கான பணம்.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா, தல சுத்துது

Election: நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்றோடு பிரச்சாரம் முடிந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது தேர்தல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் என அனைவரும் தற்போது தயார் நிலையில் இருக்கின்றனர். மத்திய ஆயுத போலீஸ் படையும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அந்த எந்திரங்களை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இதில் அடுத்ததாக அவர் சொன்னது தான் தலை சுற்றும் அளவுக்கு இருந்தது.

தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

அதாவது ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்து விடக்கூடாது என பறக்கும் படையினர் பல சோதனைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வந்தனர். அதில் நேற்று வரை கணக்கில் வராத 173.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் இலவச பொருட்கள், மதுபானங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 43.45 கோடி ஆகும் என அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு என்றால் மற்ற மாநிலங்களில் கணக்கிட்டு பார்த்தால் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. எங்கே போகிறது நாடு என்றுதான் இதை பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது.

Trending News