செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மறுபடியும் சிலுவையா.? சிவனடியார் லோகேஷை மாற்றிய ஜோசப் விஜய்

அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளும் விஜய் சமீப காலமாக சந்தித்த பெரிய பிரச்சினை இந்த சிலுவை தான். அவர் எதார்த்தமாக ஒரு விஷயத்தை செய்தால் கூட அது பெரும் பிரச்சனைக்கு அடித்தளமாக மாறிவிடுகிறது. அப்படித்தான் அவர் படத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த சிலுவையும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் வரும் அரபிக் குத்து பாடலில் விஜய் கழுத்தில் நங்கூரம் சிலுவை கலந்த ஒரு டாலர் அணிந்திருப்பார். அது ஒரு சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படத்திலும் தீ தளபதி பாடலில் இந்த சிலுவை இடம் பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் நேற்று அட்டகாசமாக வெளியானது.

Also read: 1% கூட விருப்பமில்லாமல் நடித்து சூப்பர் ஹிட் அடித்த தளபதி.. மகனோட இமேஜை டேமேஜ் செய்த எஸ்ஏசி

இதற்காகவே ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டு லியோ என்ற டைட்டிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது பலரையும் கவர்ந்த நிலையில் அந்த வீடியோவில் பல விஷயங்களை ரசிகர்கள் கவனித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு விஷயம் தான் இந்த சிலுவை. அதாவது அந்த வீடியோவில் விஜய் சாக்லேட் செய்வது போன்றும், மறுபுறத்தில் கூர்மையான கத்தி செய்வது போன்று காட்டப்பட்டிருந்தது.

மறுபடியும் சிலுவை

leo-bloody-sweet-vijay
leo-bloody-sweet-vijay

அதில் தான் ஒரு காட்சியில் சுவற்றின் மீது மிகப்பெரிய சிலுவை இருக்கும். அதிலும் அதைச் சுற்றி சிவப்பு நிற வெளிச்சமும் இருக்கும். இதைத்தான் தற்போது ரசிகர்கள் கவனித்து மறுபடியும் சிலுவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சிவனடியார் லோகேசையே இப்படி மாற்றி விட்டாரே ஜோசப் விஜய் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.

Also read: விஜய்யுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது ஸ்ரேயா!

ஏனென்றால் லோகேஷின் கழுத்தில் எப்போதும் ஒரு ருத்ராட்ச மாலை இடம் பெற்றிருக்கும். இதை பல போட்டோக்களில் நாம் கவனித்திருப்போம். அப்படி இருக்கையில் இந்த வீடியோவில் சிலுவை இடம் பெற்றிருப்பது விஜய்யின் கட்டாயத்தினால் தானா என்ற ஒரு பரபரப்பான விவாதமும் இப்போது நடந்து வருகிறது.

மேலும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தன்னுடைய படத்தில் இதை கட்டாயமாக்கி வருகிறார் என்ற ஒரு பேச்சும் கிளம்பியுள்ளது. எது எப்படி இருந்தாலும் லியோ படத்தை பொருத்தவரையில் இப்போது வெளியாகி இருக்கும் வீடியோ பல குறிப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதை வைத்து பார்க்கும் பொழுது யாரும் எதிர்பார்க்காத பல சஸ்பென்ஸ் இப்படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஓடிடி நிறுவனங்கள்.. வாரிசு, துணிவால் வந்த சோதனை

Trending News