கேப்டன் ருத்துராஜ்ஜை சுற்றியுள்ள அழுத்தங்கள். தோனியை மீறி செய்வதறியாது நிற்கும் சின்னதம்பி

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டங்கள் மிக மோசமாக இருந்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் 10 அணிகளில் தற்போது நிலவரப்படி சிஎஸ்கே 7வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கிறது.

CSK அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதுதான் இப்பொழுது பூதாகர பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியுடன், சென்னையில் விளையாடிய போட்டியிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

பெங்களூர் அணியுடன் தோல்வி அடைந்த பிறகு வெறும் 50 ரன்களில் தான் தோற்றோம் என ருத்ராஜ் பேட்டி கொடுத்தது அனைவரையும் எரிச்சல் அடையச் செய்தது. ஐபிஎல் பொறுத்தவரை 50 ரன்கள் என்பது ஒரு பெரிய அளவிலான வேறுபாடு. இவர் இப்படி சொன்னார் என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது என பல வீரர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை அணியை பொறுத்தவரை அந்த அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லை. சரியான வீரர்களையும் தேர்வு செய்ய அவர்களிடம் திட்டமிடுதல் இல்லை. கேப்டன் ருத்துராஜும் அணியில் இந்த வீரர்கள் தனக்கு வேண்டும் என்று ஆணித்தனமாக கூறுவதில்லை, தோல்விக்கு பின்னர் ஏதேதோ பேசுகிறார்.

மொத்தத்தில் கேப்டன் பொறுப்பு அவருக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுப்பதாக தெரிகிறது. அணியில் சீனியர் வீரர் தோனி இளம் வீரர்களை எப்படி வழி நடத்துகிறார் என்பது தெரியவில்லை. இப்படி பல கேள்விகள் சென்னை அணியை சுற்றி வைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் அணியின் நிர்வாகம் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

Leave a Comment