ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

Venkat Prabhu: கோட் படத்தில் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.. தோனி டீ சர்ட்டோடு விசில் போடும் வெங்கட் பிரபு

வெளிநாடுகளில் முழுவதுமாய் கோட் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. இப்பொழுது சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சண்டை காட்சிகள் எடுத்து வருகிறார் வெங்கட் பிரபு. இறுதிக்கட்ட காட்சிகள் மே 15 தேதியோடு முடிவடைகிறது

கோட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் வெங்கட் பிரபு சென்னை அணி டீ சர்ட்டோடு சுற்றி வருகிறார். இவர் ஒரு தீவிரமான சென்னை அணி ரசிகர். அதற்கு ஏற்றார் போல் தான் விசில் போடு பாடலும் அந்த படத்தில் வைத்திருக்கிறார். தோனி நம்பர் பதித்த டி-ஷர்டை அணிந்திருக்கிறார்

தோனி டீ சர்ட்டோடு விசில் போடும் வெங்கட் பிரபு

இப்பொழுது சென்னை அணியின் முக்கியமான வீரர்கள் இரண்டு பேர் கோட் படத்தில் வருகிறார்கள் அவர்களோடு வெங்கட் பிரபுவும் படத்தில் தலை காட்டி செல்கிறார். அந்த இரண்டு வீரர்கள் யார் என்பது ரகசியமாக வைத்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் தோனி நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. விசில் போடு பாடல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தது. சூட்டிங் ஸ்பாட்டிலும் வெங்கட் பிரபு விசில் போடு என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லி வருகிறார்.

ஏற்கனவே விஜய்யை வைத்து படம் எடுப்பதாக தோனி கூறி வந்த நிலையில் அவர் கட்டாயமாக படத்தில் ஏதாவது இடத்தில் தலை காட்டி செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தோனி படத்தில் தலை காட்டினால் அதுவே படத்திற்கு பெரிய லெவல் பிரமோஷன் ஆக அமையும்

Trending News