Dairy Milk: சமயம் பார்த்து சம்பவம் செய்திருக்கிறது டைரி மில்க் நிறுவனம். முன்பெல்லாம் இந்த சாக்லேட் நிறுவனத்தின் விளம்பரம் பெரும்பாலும் காதல் கதைகளை சார்ந்து தான் இருக்கும்.
ஆனால் சமீபத்தில் வெளிவந்திருக்கும் விளம்பரம் சமூக பிரச்சனையை சார்ந்து இருக்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு குறித்த பிரச்சனை பெரிய அளவில் கையாளப்பட்டு வருகிறது.
10 ரூவா சாக்லேட்டுல முடுச்சிட்டாங்களே!
இந்த நேரத்தில் இந்த விளம்பரத்தில் உறவுகளை மேம்படுத்த மொழி தேவையில்லை என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.
ஐந்து வடநாட்டு பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் அந்த இடத்திற்கு புதிதாக வந்த தமிழ்நாட்டுப் பெண் அவர்களை தேடி வருகிறாள்.
உடனே அவர்கள் உனக்கு இந்தி தெரியுமா என்று கேட்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் கொஞ்சம் தெரியும் என சொல்கிறாள்.
இந்தி தெரியாத அவளும், தமிழ் தெரியாத இவர்களும் கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு பெண் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் மூலம் ஒரு விஷயத்தை பகிர்கிறாள்.
அது எல்லோருக்கும் புரிந்து சிரிக்கிறார்கள். உடனே அந்த இந்தி பேசும் பெண் கையில் இருக்கும் டைரி மில்க் சாக்லேட்டை தமிழ் பெண்ணிடம் கொடுக்கிறாள்.
அந்த சாக்லேட்டை எல்லோரும் பகிர்ந்து உண்டு தங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தையை பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயம் பார்த்து வந்த இந்த விளம்பரத்தை சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.