சந்தியா ராகம் சீரியலில் தனம் எடுத்த அதிரடி முடிவு.. ரகுராம் மாயாவுக்கு கொடுக்கும் விமோசனம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், என்னதான் ரகுராம் மாயாவை தன்னுடைய மகளாக தத்தெடுத்திருந்தாலும் பெற்ற மகளுக்கு ஈடாகாது என்பதை நிரூபிக்க போகிறார். அதாவது தனம், ரகுராமுக்கு பிடிக்காத கதிருடன் வாழ்க்கையை தேடி போனார். அப்பொழுது ரகுராமுக்கு தனத்தின் மீது கோபம் தான் இருந்தது.

ஆனால் மகளை வெறுக்கவே இல்லை, தனத்திற்கு ஒரு கஷ்டம் என்றதும் ரகுராம் தான் முதலில் போய் நின்றார். ஆனால் மாயா விஷயத்தில் வரும் பொழுது தத்தெடுத்த மகள் தான் என்று அலட்சியம் காட்டும் விதமாக தத்தெடுத்ததே தவறு என்று அதை சட்டப்படி ரத்து செய்வதற்கு தயாராகி விட்டார். அதாவது தனம் கதிருடன் வெளியே போவதற்கு மாயா தான் காரணம் என்று பத்மா ஒரு வீடியோவை கொண்டுட்டு வந்து ராகுராமுக்கு போட்டு காமிக்கிறார்.

உடனே மாயா மீது கோபப்பட்ட ரகுராம், லாயரை வீட்டிற்கு வரச் சொல்லி மாயாவை தத்தெடுத்ததை கேன்சல் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ண சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தனம், எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம். அதனால் இதுவரை மாயா கெட்ட பெயர் வாங்கியது போதும், எல்லாம் உண்மையும் இப்பொழுதே நான் அப்பாவிடம் சொல்லனும் என்று கதிரிடம் சொல்லிவிட்டு தனம் கிளம்புகிறார்.

கதிர் வேண்டாம் என்று தடுத்தாலும் கேட்காமல் கிளம்பிய நிலையில் கதிர் மாயாவுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி விடுகிறார். உடனே தனம் வீட்டிற்கு வரும் பொழுது ரகுராமிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது. அதை தடுக்க வேண்டும் என்பதற்காக வாசலிலேயே ஜானகி மற்றும் மாயா நின்று தனத்தை தடுக்கிறார்கள். ஆனால் மாயா வாசலில் நின்று அப்பா என்று கத்திய நிலையில் ராகுராமுக்கு கேட்டு விட்டது.

அந்த வகையில் தனம் எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரகுராமிடம் நடந்த உண்மையை சொன்னால் மட்டுமே ரகுராமுக்கு மாயா மூலம் விமோசனம் கிடைக்கும். இப்பொழுதுதான் சீனு, மாயாவை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கு தயாராக இருக்கிறார். இந்த நேரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வந்தால் மாயா வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்ற நோக்கத்தில் தனம் எடுத்த முடிவு சரியாக தான் இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →