Dangers of swimming pool: நம்முடைய ஆரோக்கியத்திற்கும் உடல் சுறுசுறுப்புக்கும் ஏகப்பட்ட கலைகள் நம்மை சுற்றி இருக்கிறது. ஆனால் அதில் எது நமக்கு ஈசியாகவும் சுவாரசியமாக இருக்குமோ அதை தான் நாம் தேர்ந்தெடுக்கிறோம். அப்படி ஒரு தற்காப்பு கலை தான் நீச்சல்(Swimming). அதுவும் கோடை காலங்கள் என்றால் எங்கேயாவது ஒரு தண்ணி தொட்டி இருக்காது, அதுல போய் குதிச்சிடலாமா என்று நினைப்பு அனைவருக்குமே இருக்கும்.
அந்த சமயத்தில் கிராமப்புறங்களில் கிணறு, ஆறு போன்ற விஷயங்களில் இறங்கி நீச்சல் அடித்து விடுவார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு அந்த ஒரு கொடுப்பினை இல்லை என்றே சொல்லலாம். அதற்காகத்தான் காசு கொடுத்தா எல்லாம் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப நகர்ப்புறங்களில் பல இடங்களில் நீச்சல் குளத்தை கட்டி விட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் பணம் கொடுத்து நீச்சல் கற்றுக் கொள்ளவும் பலரும் போகிறார்கள். அத்துடன் தினமும் அதில் போய் குளித்தால் திருப்தியாக இருக்கும் என்று ஆசைப்பட்டும் போகிறார்கள். ஆனால் இதில் தினமும் நீச்சல் அடித்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து நீச்சல் அடித்து வருகிறார்கள்.
அதாவது நீச்சல் குளத்தை பயன்படுத்துவதால் அதை சுத்தப்படுத்துவதற்காக குளோரின் எனும் கிருமி நாசினி பயன்படுத்துகிறார்கள். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை முற்றிலுமாக அளிப்பதற்கு உதவியாக இருக்கிறது. ஆனாலும் இந்த குளோரின் பார்ம் போடப்பட்ட தண்ணீரில் தினமும் குளிப்பதால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குளோரினால் ஏற்படும் ஆபத்து
குளோரின் பவுடரை பயன்படுத்துவதால் அதில் குளிக்கும் போது நம்முடைய தோளில் அலர்ஜியை ஏற்படுத்தும். அத்துடன் தோளில் உள்ள எண்ணெய்களை நீக்கும் விதமாக தோல் வறட்சி, அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இதனால் நம்முடைய முகம் வயதான தோற்றம் போல் சுருங்கி காணப்படும்.
அத்துடன் முகத்தில் முகப்பருக்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே முகப்பருக்கள் இருப்பவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து வந்தால் இன்னும் மோசமாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கு. இது மட்டும் இல்ல தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உச்சந்தலையில் அரிப்பு, முடி உதிர்தல், கண்ணெரிச்சல் இது போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இருக்கிறது.
இதையெல்லாம் தடுக்கும் சில டிப்ஸ்கள்:
நீச்சல் குளத்திற்கு குளிக்க போவதற்கு முன் மற்றும் குளித்துவிட்டு வந்தபின் கண்டிப்பாக நல்ல தண்ணீர் பயன்படுத்தி சுத்தமாக குளித்து விட வேண்டும். அப்பொழுது தான் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும். அத்துடன் குளித்துவிட்டு வந்த பிறகு நம்முடைய சருமங்கள் கொஞ்சம் வறண்டு போய் இருந்தால் அதற்கான மாய்ஸ்ரைஸ் அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி நீவி விட வேண்டும்.
மேலும் தலை முடியை பாதுகாப்பதற்காக நீச்சல் குளத்தில் பயன்படுத்தக்கூடிய தொப்பிகளை அணிந்து கண்களை பாதுகாக்கும் வகையில் அதற்கான கண் கண்ணாடியை போட்டு கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து தோல் பிரச்சினை ஏதாவது எரிச்சல் போன்ற சில அறிகுறிகள் தென்பட்டால் உடனே இதற்கான மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே நிச்சயமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.