புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரன் கூடவே இருந்து குழி பறிக்க போகும் தர்ஷன்.. ஓவராக அட்டகாசம் பண்ணிவரும் முரட்டுக் கிழவன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை கடத்திட்டு போய் இந்த அளவுக்கு கொடூரமாக ஆக்கி தற்போது புத்தி பேதலித்து போய் நிற்பதற்கு முக்கிய காரணம் குணசேகரன் தான்.

ஆனால் அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் மொத்த பழியையும் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் மீது போட்டு ஓவராக அட்டகாசம் பண்ணி வருகிறார் குணசேகரன். இவருடைய கொடூரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று சொல்லும் அளவிற்கு முரட்டுக் கிழவனாக துள்ளி குதிக்கிறார்.

ஈஸ்வரி வீட்டிற்கு வந்து தர்ஷணியை பார்க்க வேண்டும் என்று போராட்டம் பண்ணியும் யாருமே அவரை பார்ப்பதற்கு அனுமதி செய்யவில்லை. அதே நேரத்தில் குணசேகரன் நான் வேணும், என்னுடைய பணம் வேணும் என்று நினைப்பவர்கள் மட்டும் வீட்டிற்குள் வரவும்.

தர்ஷனின் மாஸ்டர் பிளான்

மற்றவர்கள் எல்லாரும் வெளியே போய் விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். உடனே தர்ஷன் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் அப்பா சொல்வதைக் கேட்டு உள்ளே போய்விட்டார். ஆனால் தர்ஷன் போனதற்கு பின்னணி என்னவென்றால் சொத்துக்காகவும் அப்பா மீது இருக்கும் பாசத்துக்காகவும் போகவில்லை.

இப்போதைக்கு தானும் இவர்கள் கூட வெளியே நின்று விட்டால் தர்ஷினியை பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாமல் போய்விடும். அத்துடன் என்னுடைய துணை இப்பொழுது தர்ஷினிக்கு தேவை என்ற ஒரு யோசனையில் தான் தர்ஷன் உள்ளே போய்விட்டார்.

அத்துடன் இவர் மூலமாக தான் குணசேகரன் செய்த தவறுகள் அனைத்தும் வெளிவர போகிறது. இதற்கிடையில் ஈஸ்வரி என்னுடைய மகளைப் பார்க்காமல் நான் இங்கே இருந்து போக மாட்டேன் என்று வெளியே உட்கார்ந்து போராட்டம் பண்ணுகிறார்.

அந்த நேரத்தில் குணசேகரனின் அம்மா தர்ஷினியை கீழே கூட்டிட்டு வருகிறார். உடனே ஈஸ்வரி உள்ளே போயி தர்ஷினியை பார்த்து பேசுகிறார். ரேணுகாவும் நந்தினியும், தர்ஷினி தர்ஷினி என்று கூப்பிடுகிறார்கள்.

ஆனால் தர்ஷினிக்கு யாருமே நினைவில்லாத மாதிரி புத்தி பேதலித்து போய் இருக்கிறார். என்னதான் மயக்க மறந்து ஊசி போட்டு பயத்தில் இருந்தாலும் ஜீவானந்தம் மட்டும் தான் ஞாபகத்துக்கு இருக்கிறது. மற்றபடி யாரையும் தெரியல பெற்ற அம்மாவையும் தெரியவில்லை என்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.

கூடிய விரைவில் இதற்கெல்லாம் காரணம் குணசேகரன் என்ற உண்மை தெரிந்ததும் அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்தால் இன்னும் இந்த நாடகம் மக்கள் மத்தியில் பழைய மாதிரி இடம் பிடித்து விடும்.

Trending News