வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Ethirneechal: குணசேகரனை பிளாக்மெயில் பண்ணும் தர்ஷினி.. மொய் விருந்து பொய்விருந்தாக மாற்றப்போகும் கரிகாலன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், மொய் விருந்து நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்துவதற்காக நந்தினி சொந்தக்காரர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க போகிறார். ஆனால் போகும்போது குடும்பத்தையும் கூட்டிட்டு போகிறார். அங்கே போயிட்டு பத்திரிக்கையில் குணசேகரன் பெயர் இல்லை என்றதும் சொந்தக்காரர் ஏளனமாக பேசுகிறார்கள்.

இதைக் கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாத கதிர் வழக்கம் போல் எரிமலையாக வெடித்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து நந்தினி தெரிந்தவர்கள் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து முடிக்கிறார். அதில் ஒரு சில பேர் பத்திரிக்கையை பார்த்து குணசேகரன் பெயர் இல்லை என்றதும் குணசேகருக்கு போன் பண்ணி கேட்கிறார்.

தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் குணசேகரன்

உடனே நந்தினி அந்த போனை வாங்கி குணசேகரனுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் தான் அவருடைய பெயர் இல்லை என்று சரவெடியாக வெடித்து விடுகிறார். பிறகு இதை விசாலாட்சி கோபத்தில் கேட்கும் பொழுது ரேணுகா குணசேகரன் மட்டும் தான் உங்க பிள்ளையா மற்ற பிள்ளைகள் உங்களுக்கு பிறக்கலையா என்று கேட்கிறார்.

இதனை தொடர்ந்து வழக்கம்போல் டைனிங் டேபிள் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் ஜீவானந்தம் ஈஸ்வரியை பார்த்து தர்ஷினி இப்போது ரெஸ்ட் எடுக்கட்டும். இன்டர்நேஷனல் மேட்ச் வரும் பொழுது அதில் கலந்து கொள்ளட்டும். அதுவரை உடம்பு வலிமையும் மன அமைதியும் பெறட்டும் என்று ஈஸ்வரிடம் தர்ஷினியை ஒப்படைத்து விடுகிறார்.

உடனே ஈஸ்வரி தர்ஷினியை கூட்டிட்டு குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஏன் இங்கே கூட்டிட்டு வரவேண்டும் என்பது தான் தெரியவில்லை. ஏனென்றால் ஈஸ்வரியோ, தர்ஷினிக்காக குணசேகரன் வேண்டாம் என்று விவாகரத்து பண்ண முடிவு எடுத்து இருக்கிறார். அதற்கான வேலைகள் எல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் பொழுது எதற்கு மறுபடியும் மகளை இங்கே கூட்டிட்டு வருகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பிறகு தர்ஷினியை பார்த்து குணசேகரன் கோபத்தில் கொந்தளிக்க போகிறார். ஆனால் இவருடைய கோபம் எல்லாம் ஒன்னும் வேலைக்காகாது என்பதற்கேற்ப தன்னை கடத்துன விஷயத்தை வைத்து குணசேகரனை பிளாக் மெயில் பண்ண போகிறார். ஆனால் என்ன ஆனாலும் நாங்கள் இங்கே இருந்து சொகுசு வாழ்க்கையை விட்டு வரமாட்டோம் என்பதற்கு ஏற்ப அங்கேயே அண்டி பிழைத்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நந்தினி மற்றும் கதிர் இந்த மொய்விருந்தில் அசிங்கப்படும் அளவிற்கு பொய் விருந்தாக மாற்றுவதற்கு கரிகாலன் பல சதி வேலைகளை பார்த்து வருகிறார். அத்துடன் குணசேகரன் இல்லாத இந்த நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்பதற்கு ஏற்ப ஒரு ஈ காக்கா கூட வராமல் வெறிச்சோடி போகப்போகிறது.

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பதற்கு ஏற்ப இந்த ஒரு விஷயத்தில் நந்தினி மற்றும் கதிர் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்கள். பிறகு வழக்கம்போல் குணசேகரன் இதெல்லாம் சந்தோஷத்தில் வேடிக்கை பார்த்து நிற்கப் போகிறார். இதனை அடுத்து குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனி மற்றும் சக்தி. அந்த வழியில் ஜனனிக்கும் ஒரு கிராக் மாதிரி இருக்கும் சைக்கோவை வைத்து கவுக்க போகிறார்.

Trending News