புதன்கிழமை, ஜனவரி 22, 2025

போலீஸ் கஸ்டடிக்கு போன தர்ஷினி.. ஜீவானந்திடம் கையும் களவுமாய் சிக்க போகும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினி வாயைத் திறந்து அம்மா என்று கூப்பிட்டு ஈஸ்வரியின் அரவணைப்புடன் ஒட்டிக்கொண்டார். இதை பார்த்து உமையாள், ஈஸ்வரியை வெளியே போக சொல்கிறார். உடனே ஈஸ்வரி கொந்தளித்து ஒழுங்கு மரியாதை என் மகளை விட்டு போயிடு.

இல்லேனா உன்னை நான் ஒண்ணுமே இல்லாம ஆக்கி விடுவேன் என்று சண்டை போடுகிறார். அதே மாதிரி ஞானமும், உமையாளை தரை குறைவாக பேசி வெளியே அனுப்பி விட்டார். தற்போது குணசேகரன் வீட்டில் இல்லாததால் உமையாள் எங்க அண்ணன் வரட்டும் அப்புறம் எல்லாத்துக்கும் இருக்கு என்று சொல்லி கிளம்பி விட்டார்.

இதனைத் தொடர்ந்து குணசேகரன், ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமி உடன் சேர்ந்து ஏதோ பிளான் பண்ணப் போகிறார். அதே நேரத்தில் சக்தி, சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கிறார் என்ற உண்மையை தெரிந்ததும் கரிகாலன் அவரிடம் சண்டை போட்டு வருகிறார். கரிகாலனைப் பொறுத்தவரை இந்த வீடியோவை வைத்து குணசேகரனை நம் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறார்.

இதற்கிடையில் ஜனனி மற்றும் கதிரும் சந்தித்துக் கொண்டு குற்றவையுடன் சேர்ந்து அஞ்சனவையும் ஜனனியின் அம்மாவையும் கண்டுபிடிப்பதற்கு ராமசாமியை பாலோ பண்ணி போனார்கள். ஆனால் அந்த பிளான் சொதப்பிவிட்டது. இதனை தொடர்ந்து தர்ஷினிக்கு கொஞ்சம் கொஞ்சம் பழைய நினைவுகள் வர ஆரம்பித்து விட்டது.

பாதுகாப்பாக இருக்கும் தர்ஷினி

அத்துடன் குற்றவை உதவியுடன் தர்ஷினிக்கு வீட்டில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பெண் போலீசாரை அனுப்பி தர்ஷினியை கஸ்டடியில் வைத்திருக்கிறார். இதை எல்லாம் எப்படியாவது தகர்த்து எறிந்து சித்தார்த்துக்கும் தர்ஷினிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று அராஜகம் பண்ணி வருகிறார் குணசேகரன்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத படி ஒரு டுவிஸ்டான சம்பவம் நடக்கப்போகிறது. அதாவது தர்ஷினி இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் முழுக்க முழுக்க குணசேகரன் தான் என்கிற உண்மை ஜீவானந்தம் மூலம் வெளிவரப் போகிறது. அத்துடன் ஏற்கனவே குணசேகரன், ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றதற்கு கொலை வெறியில் இருக்கிறார்.

கடைசியில் குணசேகரின் முடிவு ஜீவானந்தம் கையில் தான் முடிய போகிறது. அப்பொழுதுதான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு விடிவு காலமே பிறக்கும்.

Trending News