வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் பிக் பாஸ் போகும் மருமகள்.. கேள்விக்குறியாக போகும் பாக்கியலட்சுமி சீரியல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஒரு வாரமாக தாத்தாவின் மரணத்தை காட்டி பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீரை வர வைக்கும் படி அனைத்து ஆர்டிஸ்ட்களுமே எதார்த்தமாக நடித்துக் காட்டி இருக்கிறார்கள். தற்போது இது முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஈஸ்வரியை ஆறுதல் படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அதிலும் ஈஸ்வரி பொட்டு இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா ரொம்பவே பரிதாபமாக பேசுகிறார். உடனே பாக்யா நீங்கள் இப்படி இருந்தால் மாமாவுக்கு பிடிக்காது. அதனால் எப்பொழுதும் போல பொட்டு வைத்து இருக்க வேண்டும் என்று மாமியார் நெத்தியில் பொட்டு வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வருகிறார்.

பாக்கியாவிற்கு டாட்டா போட்டு பிக் பாஸ்க்குள் என்ட்ரி கொடுக்கும் மருமகள்

இதனை தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து பாக்யாவை வெறுத்து ஒதுக்கி வந்த ஈஸ்வரி, கோபி குடும்பத்தை கைவிட்டு போன நிலையில் பாக்யாவை கொண்டாட ஆரம்பித்து விட்டார். ஆனாலும் ஈஸ்வரி, யாரையாவது திட்ட வேண்டும் என்பதற்காக பாக்கியாவிற்கு அடுத்தபடியாக அமிர்தாவை திட்டிக் கொண்டு வந்தார்.

அதிலும் அமிர்தாவை பார்த்து ராசி இல்லாதவள், நீ வந்த பிறகு தான் இந்த குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான் எழில் முன்னேறாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று வார்த்தையாலே தாக்கி ஓவராக டார்ச்சர் கொடுத்து வந்தார்.

இனிமேலும் தன் பொண்டாட்டி பாட்டியிடம் அவமானப்படுவதை என்னால் பார்க்க முடியாது என்று பொங்கி எழுந்த எழில், ஈஸ்வரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது மொத்தமாக பாக்கியலட்சுமி சீரியலுக்கு குட் பாய் சொல்லும் நேரம் வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் அக்ஷிதா வருகிற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்.

ஏற்கனவே சீரியல் முடியும் தருவாயில் இருப்பதால் இவருக்கு பதிலாக வேறு ஒரு ஆர்டிஸ்ட்டை போட முடியாத ஒரு சூழ்நிலை. இதனால் அமிர்தா கேரக்டருக்கு பதிலாக என்ன செய்யலாம் என்று கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் நாடகம் முடியப்போவதால் அதை நடித்துக் கொடுத்து போக வாய்ப்பு இருக்கிறது.

இவர் ஏற்கனவே பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார். இதற்கு முன் வந்த காற்றுக்கு என்ன வேலி என்ற சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படி நடிப்பையும் டான்சையும் வைத்திருக்கும் அக்ஷயா பிக்பாஸிற்குள் போய் மக்களின் மனதிற்குள் இடம் பிடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News