Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் நினைத்தபடி மூத்த மகன் சரவணனுக்கு தங்கமயிலுடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் இதுவரை ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்த பாண்டியன் குடும்பத்திற்குள் இனி தான் சண்டை சச்சரவு போன்ற பல விஷயங்கள் நடக்கப்போகிறது.
அதுவும் மூத்த மருமகளாக உள்ளே நுழைந்த தங்கமயில் மற்றும் அவருடைய அம்மா பாக்கியவால் ஏழரை நடக்கப் போகிறது. அதாவது பொய் பித்தலாட்டம் பண்ணி மகளை கரை சேர்க்க நினைத்தது வரை ஓகே தான். ஆனால் நாம் எந்த நிலைமையில் இருந்து கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறோம் என்று தரத்தை அறியாத அந்த குடும்பம் பாண்டியன் குடும்பத்திற்குள் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள்.
தங்கமயிலிடம் மாட்டிக் கொண்ட பாண்டியன் குடும்பம்
அதற்கேற்ற மாதிரி மகளிடம் எப்படி எல்லாம் கணவரை கைக்குள்ளே போட்டுக்கிடனும். அந்த வீட்டில் அதிகாரம் எப்படி நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பல வக்கிரமங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதன்படி தங்கமயிலும் தலையை ஆட்டிக்கொண்டு பாண்டியன் குடும்பத்திற்குள் நுழைந்து இருக்கிறார். இனி இவருடைய சாயம் என்னைக்கு வெளுக்க போகிறது என்று தெரியவில்லை.
ஆனால் பாண்டியன் குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க போகிறார். அந்த வகையில் சரவணன் மற்றும் தங்க மயிலுக்கு முதல் ராத்திரி நடப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அத்துடன் அவர்கள் தங்கும் அறையில் அலங்காரங்களும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறைக்கு தற்செயலாக வந்த ராஜி அதை பார்த்து வியந்து போய் நிற்கிறார். ஆனால் அதற்கு முன் கதிர் அங்கு இருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை.
பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கத்தில் பூத்து போய் விட்டார்கள். எதேர்ச்சியாக இருவரும் அங்கே மோதிக் கொண்டு வெட்கப்பட்டு ஒருவரை ஒருவர் கண்ணாலே பார்த்து ரொமான்ஸ் பண்ணிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் மீனா மற்றும் செந்தில் உள்ளே வருகிறார்கள். வந்ததும் கதிர் மற்றும் ராஜியை கிண்டல் பண்ணியதால் அவர்கள் அங்கிருந்து ஓடி விடுகிறார்கள்.
அத்துடன் மீனா நாமும் கொஞ்சம் இங்கே இருந்து ரொமான்ஸ் பண்ணலாம் என்று செந்தில் உடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டு ரொமான்ஸ் பண்ணுகிறார். அப்பொழுது அங்கே கோமதி மற்றும் ராஜி, தங்கமயிலை கூட்டிட்டு வருகிறார்கள். வந்ததும் இவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதை பார்த்து அவர்கள் கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் தங்கமயில் முகம் மட்டும் சுருங்கி போய்விட்டது.
தங்கமயிலை பொறுத்தவரை சரவணன் மட்டும் நமக்கு போதும். மற்றவர்கள் யாரும் தேவையில்லை என்ற நினைப்பு வந்து விட்டது. அத்துடன் மீனாவை கண்டாலே சுத்தமாக அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் மூத்த மருமகள் நான் தான் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கிறோம் என்ற ஆணவமும் அவரிடம் இருக்கிறது. இதனால் போகப்போக என்னென்ன ஆக்கிரமங்கள் எல்லாம் தங்கள் மயில் பண்ணப் போகிறாரோ? இவரிடம் சிக்கிக் கொண்டு பாண்டியன் குடும்பம் அவஸ்தைப்பட போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்.. ஹீரோயிசம் காட்டும் கதிர்
- Pandian Stores 2: தங்கமயில் சரவணன் கல்யாணத்தில் ராஜிக்கு பிறந்த விடிவு காலம்.. ஒரு வழியா பாண்டியன் மச்சானுக்கு ரூட் கிளியர் ஆயிட்டு
- Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்திற்கு கவச குண்டலமாக இருக்கும் மீனா.. ஆமை போல் வீட்டிற்கு நுழையும் சூனியக்காரி